தொழில் திணைக்களத்தின் விசேட குழு ஒன்று பத்தலகொட செல்கிறது

குருநாகல் – பத்தலகொட தோட்ட மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய விசேட குழு ஒன்றை அந்தத் தோட்டத்துக்கு நாளை அனுப்ப உள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்தரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் தாெடர்பான பல சட்டங்கள் காலாவதியாகியுள்ளதாகவும் அச்சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான யோசனைகளை முன்வைப்பது அவசியம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பத்தலகொட தோட்டத்தில் வசிக்கும் மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் MediaLK செய்தி வெளியிட்டிருந்தது. இந்த செய்தி தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், பத்தலகொட தோட்ட மக்கள் எதிர்நோக்கும் தொழில் பிணக்குகள் தொடர்பில் எந்தவிதமான முறைப்பாடுகளும் இதுவரையில் தமக்குக் கிடைக்கவில்லை எனவும் கூறினார்.
இறப்பர் தோட்டமான பத்தலகொட தோட்டத் தொழிலாளர்களுக்கு நாற்சம்பளமாக ஆயிரம் ரூபாய் சம்பளம் இந்த வருடத்திலிருந்தே வழங்கப்படுகிறது. இவர்களுக்கான சம்பள சீட்டு வழங்கப்படுவதில்லை. அதனால், தங்களது சம்பளத்தில் கழிக்கப்படும் தொகைகள் எதற்காக கழிக்கப்படுகின்றன என்பதுத் தொடர்பில் தொழிலாளர்கள் அறிந்துகொள்ள முடியாதுள்ளது.
ஊழியர் சேமலாப நிதி தொடர்பான அறிக்கை இறுதியாக 2019ஆம் ஆண்டே இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2000ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டுவரையிலான 18 தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதி தொடர்பான 24 அறிக்கைகளை ஆராய்ந்தபோது, இவர்களுக்கு செலுத்தப்பட வேண்டிய ஊழியர் சேமலாப நிதி குறைந்தளவிலேயே செலுத்தப்பட்டுள்ளமை தெரியவருகிறது.
இதில் உள்ள ஒரு அறிக்கையில், ஊழியர் சேமலாப நிதியாக 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 385 ரூபாயும் மே மாதத்தில் 770 ரூபாயும் ஜூன் மாதத்தில் எந்தவிதமான தொகையும் செலுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,
40 வருடங்கள் தொழில்புரிந்து ஓய்வுபெற்ற ஒரு பெண் தொழிலாளருக்கு வெறும் 2 இலட்ச ரூபாயே ஊழியர் சேமலாப நிதியாக கிடைத்திருக்கிறது.
Previous articleபொலிஸ் பேச்சாளரை விசாரணைக்கு அழைத்த மனித உரிமைகள் ஆணைக் குழு
Next articleமுதியவரிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கோரிய மூன்று பொலிஸார்; நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here