கரும்புச் செய்கையாளர்களின் கண்ணீர்!

(அப்ரா அன்ஸார்)
உற்பத்தி வளங்களைப் பயன்படுத்தி மனிதனுடைய தேவையை நிறைவு செய்வதற்கு மனித தலையீட்டினால் மேற்கொள்ளப்படும் பொருளாதார முயற்சியே கைத்தொழில் ஆகும். ஆரம்ப காலங்களில் விவசாயத்தை மையமாகக் கொண்டு விளங்கிய பொருளாதாரம் இன்று கைத்தொழில் துறையாக வளர்ச்சியடைந்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் முக்கியத்துவம் பெறுகின்ற கைத்தொழிலாக கரும்பு செய்கை விளங்குகின்றது.
இலங்கை மக்களின் அன்றாட உணவுகளில் சீனியும் பிரதானமானது. தேனீர், இனிப்புப் பண்டங்கள், பிஸ்கட், கேக் முதலிய பல உணவுகளில் சேர்க்கப்படுகின்றது. இன்று சீனி உற்பத்தியில் இடைக் கைத்தொழில்களாக பல்வேறு கைத்தொழில்கள் (மதுபானம், வாசனைப்பொருள்)உருவாகியுள்ளன. சீனிக் கைத்தொழில் நடைபெறும் பிரதேசங்களாக திருகோணமலை, கந்தளாய், மொனராகலை, பெல்வத்தை, செவனகல, அம்பாறையின் ஹிங்குரானை என்பவற்றை குறிப்பிடலாம். கந்தளாயில் 1960ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்ட முதல் தர சீனித்தொழிற்சாலையானது 1994 வரை இயங்கிய நிலையில், கைவிடப்பட்டு காணப்பட்டது.
கடந்த 2014ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டின் உதவியுடன் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட ஹிங்குரானை சீனித் தொழிற்சாலையானது 15 ஆண்டுகள் இயங்காத நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டுகளுடன் மீண்டும் இயங்கத் தொடங்கியது. சீனிக் கைத்தொழிலின் மூலப்பொருளாக கரும்பு காணப்படுகின்றது. இலங்கையில் வரண்ட பிரதேசங்களில் கரும்புப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. திருகோணமலை, அம்பாறை, மொனறாகலை ஆகிய மாவட்டங்களில் கரும்பு வயல்கள் காணப்படுகின்றன. இவற்றை விட கிளிநொச்சி போன்ற இடங்களிலும் கரும்பு தொழிற்சாலைகள் அமையப்பெற்றுள்ளது. எனவே தொழிற்சாலைகள் அமையப்பெற்றுள்ள இடங்களுக்கருகாமையிலே மூலப்பொருளான கரும்பு காணப்படுகின்றமை முக்கியமானதாகும். கரும்பு தவிர சில தொழிற்சாலைகளில் குறிப்பாக தற்போது ஹிங்குரானை சீனி உற்பத்தி ஆலையில் இந்தியாவிலிருந்து கற்கண்டு பெறப்பட்டு அதிலிருந்து சீனி தயாரிப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
மூலப்பொருட்களை ஏற்றுக்கொள்வதற்கும் முடிவுப்பொருளை சந்தைக்கு கொண்டு செல்வதற்கும் பெரும்பாலும கனரக வாகனங்கள், பார ஊர்திகள் பயன்படுத்தப்படுகின்றன. இலங்கையின் வீதிகள் பெரும்பாலும் காபட் இடப்பட்டு காணப்படுகின்றமையும் இலகுவானதும், துரிதமானதுமான போக்குவரத்திற்கு வழிவகுக்கின்றது. இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் சீனிக்கு உள்நாட்டிலேயே சந்தை காணப்படுகின்றமையானது சாதகமான காரணியாக அமைகின்றது. இலங்கையின் உள்நாட்டு நுகர்விற்கு  போதுமான அளவு உற்பத்தி செய்யப்படாமையால் மேலதிகமாக பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளில் சீனியை இறக்குமதி செய்கின்ற நிலைமை காணப்படுகின்றது. எனவே உள்நாட்டு சந்தையை பூரணப்படுத்தக்கூடியளவிற்கு உற்பத்தியை மேற்கொள்வதற்காக சந்தை வசதிகள் காணப்படுகின்றது.
தொழிற்சாலைகளில் பணிபுரிவதற்கு சாதாரண தொழிலாளர்களும் பயிற்சிபெற்ற இயந்திர இயக்குனர்களும், தொழிநுட்பவியலாளர்களும்  தேவைப்படுகின்றனர். அந்த வகையில் குறைந்த கூலியில் தொழிலாளர்களை பணியில் அமர்த்த முடிவதுடன், பயிற்சிபெற்ற தொழிலாளர்களையும் குறிப்பிட்ட பிரதேசங்களில் பெறமுடிகின்றது. கரும்புச் செய்கையில் அரச கொள்கையை பொருத்தவரையில் 1987 இல் இலங்கை சீனி கூட்டுத்தாபனம் அமைக்கப்பட்டு கந்தளாய், ஹிங்குரானை ஆகிய தொழிற்சாலைகள் அதன்  கீழ் கொண்டுவரப்பட்டது. 1977 இன் பின் தனியார் துறையில் கைத்தொழில் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. கரும்பு உற்பத்தியாளர்களை பாதுகாக்க அரசு இறக்குமதி செய்யப்படும் சீனி தொடர்பாக வரி அறவிடுவதுடன் மானியங்களையும் வழங்கி வருகின்றது.
ஆரம்ப காலங்களில் இலங்கை சீனி கூட்டுத்தாபனத்தின் கீழும்  பின் தனியார் துறையின் கீழும் சீனித் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது. கரும்பு உற்பத்திக்காக காடு மற்றும் ஒதுக்குப் பிரதேசங்கள் தெரிவுசெய்யப்படுவதனால் காட்டு விலங்குகளின் நடமாட்டத்தில் இடையூறுகள் தோற்றம் பெற்றுள்ளதுடன், யானை போன்றவற்றின் அச்சுறுத்தல்களுக்கும் வழிவகுத்தது. மூலப்பொருளாக கரும்புக்கு பதிலாக கற்கண்டை இறக்குமதி செய்து அதிலிருந்து சீனி உற்பத்தி செய்கின்ற நிலைமையும் தற்போது சில தொழிற்சாலைகளில் மேற்கொள்ளப்படுகின்றது.
இயங்காமல் செயலிழந்து காணப்பட்ட தொழிற்சாலைகள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன.
கடந்த 2012ம் ஆண்டில்  ஹிங்குரானை தொழிற்சாலையும் 2015ம் ஆண்டு கந்தளாய் தொழிற்சாலையும் இயங்கத் தொடங்கியது. கடந்த அரசாங்கத்தில் மிகவும் வீழ்ச்சி கண்டிருந்த கரும்பு செய்கைக்கு புத்துயிர் அளிக்குமுகமாக பல சீனித் தொழிற்சாலைகள் திறக்கப்பட்டு, வேறு பயிர்ச்செய்கைகளில் ஈடுபட்ட விவசாயிகள் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரும்புச் செய்கையில் ஈடுபடுத்தப்பட்டனர். ஏற்கனவே 3% ஆக இருந்த சீனி உற்பத்தி தற்போது 10 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இலங்கையின் சீனி உற்பத்தியை 50 வீதமாக அதிகரிப்பதே அரசின் இலக்காகும். அத்தோடு இலங்கையின் மின்சார உற்பத்திக்கும் பங்களிப்பு வழங்கிவருகின்றது. அதாவது பெல்வத்தை சீனித் தொழிற்சாலை மூலம் 16 மெகாவோல்ட் மின்சாரமும், ஹிங்குரானை சீனித் தொழிற்சாலை மூலம் 10 மெகாவோல்ட் மின்சாரமும், கந்தளாய் சீனித் தொழிற்சாலை மூலம் 16 மெகாவோல்ட் மின்சாரத்தையும் உற்பத்திசெய்ய திட்டமிட்டுள்ளது.
இதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் நவீன உபகரணங்கள் கோரப்பட்டுள்ளது. சீனித் தயாரிப்பை மேம்படுத்துவதற்காக “உக் போகய” என்ற கரும்பு உற்பத்தித் திட்டம் கடந்த வருடம் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. 670,000 மெற்றிக் தொன் சீனி பாவனை வருடாந்தம் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த தேவையில்  90% இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றது. இதற்காக வருடமொன்றிற்கு செலவிடப்படும் நிதி 350 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். கடந்த வருடத்தினை விட இந்த வருடத்தில் 700000 மெற்றிக் தொன்களை அதிகரிப்பதே இலக்காக உத்தேசிக்கப்பட்டது.”உக் போகய ” திட்டத்தில் மொனராகலை, கிளிநொச்சி, மட்டக்களப்பு, அநுராதபுரம், திருகோணமலை, அம்பாறை, பதுளை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் உள்ள 104,000 காணிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வருடத்தில் செவனகல சீனித் தொழிற்சாலையில் இம் முறை 20000 மெற்றிக்தொன் சீனி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதுடன், 280,000 மெற்றிக்தொன் கரும்பு அறுவடை செய்யப்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் முதலாவது கரும்பு அறுவடை வெற்றிகரமாக இடம்பெற்றதாக செவனகல சீனித் தொழிற்சாலையில் நிறுவனத்தின் தலைவர் ஜனக்க நிமலசந்திர தெரிவித்துள்ளார். இதன் மூலம் 5000 குடும்பங்கள் நன்மை அடைந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
கரும்புச் செய்கையின் செயற்பாட்டு திறனின்மைகளாக, செவனகல சீனித் தொழிற்சாலைக்குச் சொந்தமாக கரும்பு பயிர் செய்யக்கூடிய மொத்த காணிப் பரப்பளவு 4241 ஹெக்டேயர்களாக இருந்த போதிலும், 2018 ஆம் ஆண்டு வரை கம்பனியின் கரும்பு பயிர் செய்யப்பட்டிருந்த மொத்த காணிப் பரப்பளவு 3355 ஹெக்டேயர்களாகும். இதற்கிணங்க தொழிற்சாலையின் செயற்பாடுகளை பேணுவதற்கு தேவையான கரும்பு வளங்களை பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தி தொழிற்சாலையின் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு கம்பனி நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.
கரும்பு பயிர் புல் வகையைச் சேர்ந்த பயிராகும். ஒரு தடவை புதிதாக நடுகை செய்ததன் பின்னர் பிரம்பு பயிராக பராமரித்து வருடாந்தம் அறுவடையைப் பெற்றுக்கொள்ளும் பயிராகும். மேலும் இப் பிரதேசத்தில் விவசாயமானது காலநிலையின் பிரகாரம் சிறுபோகம் மற்றும் பெரும்போகத்தில் மழையை இலக்காகக் கொண்டு மேட்டு நிலத்தின் பயிர்களை நடுகை செய்தல் இடம்பெறுகின்றது. அவ்வாறே 4 ஆண்டுகள், 5 ஆண்டுகள் அளவில் தொடர்ச்சியாக விளைச்சலை அறுவடை செய்த காணிகளில் மீண்டும் நடுகை செய்வதற்கு திட்டமிடப்படுகின்றது. வருடாந்தம் நடுகை நிகழ்ச்சித்திட்டமானது 600 ஹெக்டேயர்களுக்கும் 800 ஹெக்டேயர்களுக்கும் இடைப்பட்ட பெறுமதியைக் கொண்டிருந்தது.
இந்த நடுகை செய்வதற்காக திட்டமிடப்பட்டுள்ள காணிகளில் இறுதியான கரும்பு அறுவடையின் பின்னர் மீண்டும் நடுகை செய்யும் வரை தரிசாக பேண வேண்டி ஏற்படுகின்ற காலம் இறுதியாக காணப்படுகின்ற சந்தர்ப்பமாகும். எனவே வருடாந்தம் கரும்பு தண்டுகள் 250,000 மெட்ரிக் தொன் தொழிற்சாலைக்குரியதாகும். ஒரு நாளுக்கு 1000மெட்ரிக் தொன்கள் வீதம் 250 நாட்கள் குறுகிய மற்றும் நீண்ட அரைத்தல் இரண்டு தவணைகளை அளவு உள்ளடக்கியுள்ளது. இந்நாள் கணக்கில் முரண்கள் ஏற்படுவதாவது மழைக்காலம் ஆரம்பித்தலின் பிரகாரமும் கரும்பு அறுவடைக்கும் அரைப்பதற்கும் பொருத்தமான வறட்சிக் கால நிலைமை மாத்திரமாக இருப்பதுமாகும். எவ்வாறாயினும், சட்டரீதியற்ற முறையில் கரும்பு பயிர்ச்செய்கை கைவிடப்பட்ட காணிகள் சம்பந்தமாக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வருவதுடன், காணிகளை ஒட்டுமொத்தமாக முகாமைத்துவம் செய்யும் உரிமையானது   நிறுவனத்துக்கு இல்லாததனால் ஏற்பட்டுள்ள சிக்கல்களின் காரணமாகவும் இந்நிலைமை உருவாகியுள்ளது.
உற்பத்திக்காக ஈடுபடுத்தப்படுகின்ற கரும்புத் தண்டுகளில் காணப்படுகின்ற சீனியின் அளவு 2012 ஆம் ஆண்டு வரை முறையே பெல்வத்த சீனிக் கம்பனியில் கரும்பு ஒரு அலகு மெட்ரிக் தொன்னிற்கு 10.87 வீதத்திலிருந்து 9.88% வரையும் செவனகல சீனித் தொழிற்சாலையில் 11.05 வீதத்திலிருந்து 9.17 % வரையும் குறைவடைந்திருந்தது.
அவ்வாறே கரும்புத் துண்டுகளில் சீனி பிழிந்தெடுக்கும் சதவீதம் 2012 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரை பெல்வத்த சீனித் தொழிற்சாலையில் முறையே 8.01 வீதத்திலிருந்து  6.59 % வரையும் குறைவடைந்தது. அவ்வாறே கரும்புத் துண்டுகளில் சீனி பிழிந்தெடுக்கும் சதவீதம் 2012 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரை பெல்வத்தை சீனித் தொழிற்சாலையில் முறையே 8.01 வீதத்திலிருந்து 6.59 % வரையும் குறைவடைந்திருந்தது. உற்பத்திக்காக ஈடுபடுத்தப்படுகின்ற கரும்புத் தண்டுகளில் காணப்படுகின்ற சீனியின் அளவு 2012 ஆம் ஆண்டு வரை முறையே பெல்வத்த சீனிக் கம்பனியில் கரும்பு ஒரு அலகு மெட்ரிக் தொன்னிற்கு 10.87 வீதத்திலிருந்து 9.88%  வரையும் செவனகல சீனித் தொழிற்சாலையில் 11.05 வீதத்திலிருந்து 9.17 % வரையும் குறைவடைந்திருந்தது.
எவ்வாறாயினும் இந்நிலைமையில் மேம்படுத்துவதற்கு கம்பனி நடவடிக்கை எடுத்திருக்கவில்லை. கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆலோசனை பெற்றுக் கொள்ளப்பட்டு இதற்காக ஆராய்ச்சிகள் செய்யப்பட்டதன் பின்னர் ஈடுபடுத்தப்படுகின்ற தனித்தனியான பசளை  வகைகளுக்காக கலவைப் பசளைகளை ஈடுபடுத்துவதற்கு 2017 ஆம் ஆண்டின் இறுதி அரைப் பகுதியின் போது முகாமைத்துவம் தீர்மானம் எடுத்திருந்தது. எனினும் 2018 ஆம் ஆண்டு வரை சீனி சதவீதங்களில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றங்கள் காணப்படவில்லை. செவனகல சீனி பிழிந்தெடுக்கும் சதவீதம்   குறைவடைந்தமை  தொடர்பாக பரிசோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன் அதற்கான ஒரு காரணமாக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கரும்பு இனம் முதன்மையானது என்பது வெளிப்படுத்தப்பட்டது. அந்த இனம் நீர் வழங்கல் பிரதேசங்களுக்குப் பொருத்தமானது அல்ல என்பது தெளிவானதாகும். செவனகல சீனித் தொழிற்சாலையால் 2015 ஆம் ஆண்டின் போது ஆரம்பிக்கப்பட்ட காபன்டயக்சைட் உற்பத்திச் செயற்திட்டம் தொடர்பாக அந்த ஆண்டின் போது உற்பத்தி 84,580 கிலோ கிராம்களாகும்.
2016 ஆம் ஆண்டில் வடிசாலையின் உற்பத்தி நடவடிக்கைகள் 243 நாட்கள் அளவில் இடம்பெற்றதனால் அதற்கு நேரொத்த வகையில்  காபன்டயொக்சைட் உற்பத்தி 1,147,705 கிலோ கிராம்கள் வரை அதிகரித்திருந்தது. 2018 ஆம் ஆண்டில் வடிசாலை 218 நாட்கள் காலம் பேணப்பட்டிருந்தும் காபன்டயொக்சைட் இயந்திரசாலையில் பழுதுகள் ஏற்பட்டிருந்ததனால் அது 65 நாட்கள் அளவான காலம் செயற்பட்டிருந்தது. எனவே, ஒப்பீட்டு ரீதியில் 2018 ஆம் ஆண்டில் 541,1800 கிலோ கிராம்கள் வரை வீழ்ச்சியடைந்திருந்தது.
இந்த இலக்கினை அடைந்து கொள்வதற்கு பல்வேறு காரணங்கள் தாக்கமளித்திருந்தது. ஊழியர் சச்சரவுகள் காரணமாக 20 நாட்கள் காலம் கரும்பு  அரைப்பதற்கு முடியாதிருந்தது. அதனால் 20,000 தொன் கரும்புகள் இழக்கப்பட்டிருந்தது. 2018 செப்டெம்பர் மாதத்திலிருந்து அதிக மழை வீழ்ச்சி கிடைத்ததன் காரணமாக, கரும்புகளை எடுத்துச் செல்லல் மற்றும் பொயிலரை செயற்படுத்துதல் சிக்கலானதாகும். பெல்வத்தையில் ஒவ்வொரு ஆண்டிற்குமாக புதிதாக  நடுகை செய்யவேண்டிய பயிர்ச்செய்கை காணிகளின் அளவு அந்த ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீட்டின் மூலம் தீர்மானிக்கப்படுவதுடன் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் உள்ளபடியான பயிர்ச்செய்கை காணிகளின் அளவு மாற்றமடைந்துள்ளது.
நிறுவனத்தில் இயந்திரங்கள் தட்டுப்பாடு மற்றும் பழைய உடைந்த இயந்திரங்கள் காணப்படுவதுடன் காரணமாக சில ஆண்டுகளில் நிலத்தை தயார்படுத்துவதற்குரிய இலக்குகளுக்குச் செல்வதற்கு முடியாதிருந்தது. அவ்வாறே ஏனைய பயிர்ச்செய்கைகளுக்காக விவசாயிகள் ஈடுபடும் போது விளைச்சல் இலக்குகள் குறைவடையும் சதவீதம் நிறுவனம் முகங்கொடுக்கின்ற சிக்கலாகும். 2018 ஆம் ஆண்டில்  நிறுவனத்திடம் நிலத்தை தயார்படுத்தும் இயந்திரங்கள் மூன்றாக மாத்திரம் மட்டுப்பட்டதன் காரணமாக அடைந்து கொள்ளக்கூடியதாக இருந்தது 40 வீதமாகும். 2020 ம் ஆண்டில் புதிய இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டதால் இலக்கை அடைந்து கொள்வதற்காக எதிர்பார்க்கப்படுகின்றது.
குறைவாக பயன்படுத்தப்பட்ட சொத்துக்களைப் பொறுத்தவரையில் 2013 ஆம் ஆண்டின் போது ரூபா 128,910,000 பெறுமதியான குத்தகை வசதிகளின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட கிரேன் இயந்திரங்கள் வழங்குனர்களினால் கம்பனி இணங்கிக் கொண்டவாறு தொழிற்சாலையில் ஸ்தாபிக்கப்பட்டதன் காரணமாக கொள்வனவு செய்த திகதியிலிருந்து எதுவித பிரயோசனமும் எடுக்க முடியாத நிலைமை காணப்பட்டது. இந்த இயந்திரங்களுக்காக மீளாய்வாண்டின் போது கம்பனியால் செலுத்தப்பட்டுள்ள குத்தகை தவணைப் பண பெறுமதியும் வட்டியும் ரூபா 21,734,748 ஆக இருந்ததுடன் இன்னும் எஞ்சியுள்ள இரண்டு ஆண்டுகள் வரை வட்டியுடன் செலுத்த வேண்டிய மொத்த தவணைப் பணம் ரூபா 5,433,732ஆக இருந்ததனால் இச்செலவு விளைவற்ற செலவாக மாறியிருந்தது.
2013, 2014 ஆம் ஆண்டின் போது நிர்மாணிக்கப்பட்ட இந்த   கிரேன் செயற்திட்டம் வெற்றியளிக்காது தற்பொழுது பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ள முடியாத நிலை காணப்பட்டது என்பது உண்மையான விடயமாகும். இச்செயற்திட்டத்தை 2014 ஜுன் மாதமளவில் முடிவுறுத்தி அந்த ஆண்டின் பெரும் போகத்தில் கரும்பு அரைக்கும் தவணைக்காக பயன்படுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்ததுடன், அவ்வாறு வேலை  பூர்த்தி செய்யப்பட்டதன் பின்னர் நடைமுறைப்படுத்தி மிகவும் குறுகிய காலத்தில் பாதிப்பிற்கு உள்ளாகியிருந்தது. மீண்டும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததும் அது பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ள முடியாத நிலையில் காணப்பட்டது.
அரசாங்கத்தின் நிதி குற்றவியல் பிரிவின் மூலம் இது சம்பந்தமாக புலனாய்வு செய்தல் இடம்பெற்றிருந்ததுடன், அதன் இறுதித் தீர்ப்பும் நிறுவனத்திடம் தெரிவிக்கப்படவில்லை. இதில் 25% ஆன தொகை அதாவது ரூபா 32,000,000 பணம் முற்பணமாக உரிய வழங்குனரான பேன்கேயார் நிறுவனத்திற்கு நேரடியாகச் செலுத்தப்பட்டிருந்ததுடன் மிகுதியான பணம் நிதிக்குத்தகை முறைமையில் இலங்கை வங்கி பெல்வத்தை கிளையின் மூலம் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதன் போது ரூபா 11,81,21500 பெறுமதியான குத்தகை  உடன்படிக்கைக்குரிய பணத்தை குத்தகை பொறுப்பாக செலுத்துவதற்கு கணக்கில் காட்டப்பட்டுள்ளது.
1985 ல் எமது இடம் இந்த நிறுவனத்தினால் நாம் நட்ட ஏனைய பயிர்களுடன் பெல்வத்தை நிறுவனத்தினால் எடுத்துக்கொள்ளப்பட்டு இந்த பகுதியில் எமக்கு இடம் 1985 ல் கையளிக்கப்பட்டது. அந்த ஆண்டிலிருந்து இங்கு  மரங்கள் நட்டி குடிப்பெயர்ந்தாலும் இடத்திற்கான உரிமைப் பத்திரங்கள் இன்று வரை வழங்கப்படவில்லை, பாடசாலைக்கு பிள்ளையை சேர்க்க வேண்டுமானால் பெல்வத்தையில் அனுமதி வேண்டும். எமது இடத்தில் நாம் நட்ட மரமொன்றை வெட்ட வேண்டுமென்றால் பெல்வத்தையின் அனுமதியின்றி முடியாது.
இப்படி பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது. அந்தக் காலத்தில் காணி உரிமைகள் பெறுவது பற்றி அவசியம் விவசாயிகளுக்கு இருக்கவில்லை. அதன் பிறகு தான் ஊவா – வெல்லஸ்ஸ மகளிர் சங்கம் எம்மிடம் வந்து எமது பிரச்சினைகள் தொடர்பில் ஆராயத்துவங்கினர். 2017 ஆம் ஆண்டில் ஊவா வெல்லஸ்ஸ மகளிர் சங்கத்தோடு பின்னர் இட உரிமைகள் மீளப் பெறுவது பற்றி நீதி முறைமையில் நடவடிக்கைகளை எடுப்பது பற்றி அறிவுறுத்தி அதன் மூலம் பாரிய உதவிகளை பெற்றுத் தந்தனர். முதலில் நாம் இந்த இடத்தை கையகப்படுத்துமாறு ஜனாதிபதி, பிரதமர் உட்பட அமைச்சர்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்தோம். அறிவித்ததன் பின்னர் 2017 ஆம் ஆண்டு 12 ஆம் திகதியன்று பட்டியலிட்டோம்.
விவசாயிகளது இடத்தின் இலக்கம், இடத்தின் அளவுகள் பற்றி மாவட்ட செயலாளருக்கு அனுப்பி வைத்தோம். அதன் பின்னர் மாவட்ட செயலாளர் எமக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அது பற்றி காலம் எடுத்ததால் நாம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வினவினோம். பிரதேச செயலாளர் உட்பட அதிகாரிகள் வருகை தந்து முழு விபரங்களையும் பெற்றுக் கொண்டனர். விவசாயிகள் குடியிருப்புப் பகுதியான புத்தல பகுதியில் வழங்கியுள்ளனர். எமக்கு இன்னும் வழங்கப்படாவிட்டாலும் அந்த குடியிருப்புக்கள்  13ம் புத்தல பகுதியிற்கு உட்படுவதனாலாகும்.
அப்போ உங்களுக்கு தாமதமாகுவது பற்றி தகவலரியும் உரிமைகள் சட்டத்தின் கீழ் கேட்கவில்லையா? கேட்டோம் அதன் பின்னர் அவர்கள் தெரிவித்தது இந்த இடங்கள் பற்றிய தகவல்கள் பெல்வத்தை நிறுவனத்திலிருந்து பெற முடியாமல் சென்றதால் தாமதமாகியதாக பின்னர் நாமே அது பற்றிய தகவல்களை சேகரித்து மாவட்டச் செயலாளருக்கு வழங்கி வைத்தோம் அதன் பின்னர் நாமே அது பற்றிய தகவல்களை சேகரித்து மாவட்ட செயலாளருக்கு வழங்கி வைத்தோம் அதன் பின்னர் தான் இந்த வேலைத்திட்டம் ஆரம்பமாகியது.தற்போது கொஞ்சம் காலதாமதமாகியுள்ளது.171ற்கு பெயர்பட்டியல் உண்டு அதில் 160 பேர் மாத்திரம் தான் அந்த பட்டியலை நிரப்பியுள்ளனர். அடுத்த   10 பேரும் இதுவரையில்  அதை வழங்கவில்லை. கொரோனாவின் பின்னர் தான் அறியத்தந்தார்கள் 10 பேர் குறைவு அவர்களையும் தேடித் தாருங்கள் என பின்னர் காணிகள் வழங்கும் கொமிஷரை சந்தித்து அப்பிரிவினருக்கும் அதற்கு பொறுப்பான அதிகாரியை நான் அழைத்து வந்தேன். அங்கு மீதமிருந்த 10 பேரினதும் இடங்களுக்கு அழைத்துச் சென்று அனைத்து தகவல்களையும் பெற்றுக் கொடுத்தேன்.
உங்களுக்கு எத்தனை வருடங்களுக்குப் பின்னர் இந்த இடங்களின் உறுதி கிடைப்பது?
1985ல் வந்தோம் 40 வருடங்கள் ஆகின்றது.
40 வருடங்களுக்குப் பின்னர் இந்த இடங்களின் உறுதி கிடைப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்  மூலமா?
ஆம் அதனால் பாரிய நலன்களை பெற்றுள்ளோம். கரும்புத் தொழில் மேற்கொள்கின்ற பலர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டும் இருக்கிறார்கள். 4, 5 பேர் இறந்தும் போயுள்ளனர். ஏன் இங்கு இருப்பவர்கள் சத்திரசிகிச்சை செய்வதில்லை என வினவிய போது பணம் தான் பிரதான பிரச்சினையாக உள்ளது என பதில் அளித்தார்கள். கம்பனியினால் கூட எது வித உதவிகளும் கிடைக்கப் பெறுவதில்லை என்பது அவர்களுடைய கவலையாகும். இவர்களுடைய பிரச்சினைக்குரிய தீர்வை இந்த அரசு செய்து கொடுக்குமா???
பட உதவி:ஆகில் அஹ்மத்.
(தகவல் அறியும் உரிமை சட்டத்தினை பயன்படுத்தி எழுதப்பட்ட கட்டுரை)
Previous articleஅசாத் சாலி ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புபட்டிருக்கலாம்
Next articleகவிதை புத்தகமொன்று எழுதியதற்காக கைது செய்யப்பட்ட அஹ்னாப் ஜஸீம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு டீ ஐ டி யிடம் அறிக்கை கோருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here