விடை காணும் கெத்ஹேன நீர் சுத்திகரிப்புத் திட்டம்

களுகங்கை சிவனொளிபாதமலையில் இருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது.இது இலங்கையின் நீளத்தின் படி 10 வது பெரிய ஆறாகும்.இது நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 11872 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது.இதில் சுமார் 64 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.களுகங்கையில் உப்பு கலக்கப்பட்டுள்ளதால் களுத்துறை மாவட்ட மக்கள் சுமார் 6 வருடங்களுக்கு மேலாக இப் பிரச்சினைக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.களுத்துறை மாவட்டத்தில் குடிநீர் பாவிக்கும் 73,689 குடும்பங்கள் இந்நிலைமையினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.களுத்துறை தேசிய நீர் வழங்கல் சபை மூலம் நீர் வழங்கும் கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு களுகங்கையிலிருந்து பெற்றுக் கொள்ளும் நீரில் அதிக உப்பு கலந்திருப்பதால் நீர் வழங்கல் சபையும் இப் பிரச்சினைக்கு முகம்கொடுத்துள்ளார்கள்.இதனால் களுத்துறை மாவட்டத்தில் களுத்துறை,பேருவளை,பாணந்துறை,தொடங்கொடை பிரதேச செயலகப் பிரிவுகளில் வாழும் 243339 பேர் இப் பிரச்சினைக்கு முகம் கொடுக்கின்றனர்.
பேருவளை பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் 221527 மற்றும் 103065 பேர், களுத்துறை பிரதேச செயலகப் பிரிவுகளில் வாழும் 19776 குடும்பங்களும் 116465 பேர் மற்றும் பாணந்துறை செயலகப் பிரிவில் வாழும் 2694 குடும்பங்கள் மற்றும் 9905 பேர் அத்தோடு தொடங்கொடை பிரதேசத்தில் வாழும் 4554 குடும்பங்கள் மற்றும் 13804 பேர் இப் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.எனவே, இப் பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்புத்திட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.அளுத்கமை,மதுகமை, அகலவத்தை ஆகிய பிரதேசங்களை மையமாக வைத்தே இத் திட்டம் இடம்பெறுகின்றது.பல நடுத்தர அளவிலான நீர் வழங்கல் திட்டங்கள் மற்றும் பரிமாற்ற மேம்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.மேலும் பல சாத்தியக்கூறு ஆய்வுகள் நடைமுறையில் உள்ளன.அவை நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டு சிறந்த தண்ணீருக்கான எதிர்காலத்தை வழிவகுப்பதாகவே இத் திட்டம் அமைகிறது.புதுப்பிக்கப்பட்ட எஸ். எல்.எஸ் தரநிலைகளுக்கு ஏற்ப வேதியியல் மற்றும் பக்டீரியாவில் சோதனைகளை செயல்படுத்தக்கூடிய பிராந்தியத்தில் நன்கு செயல்படக்கூடிய கிளஸ்டர்ட் ஆய்வக அமைப்பு உள்ளது.இந்த ஆய்வகங்களில் மேற்கு தென் பிராந்திய ஆய்வகமானது (தெஹிவளை,பாணந்துறையில்) 2019ம் ஆண்டளவில் ஐ.எஸ் .ஒ/ஐ.இ.சி 17025 ஆய்வக அங்கீகார சான்றிதழைப் பெற்றுக் கொண்டது.NWSDB இல் உள்ள ஆய்வகம் இது உயிரியல் சோதனைக்கு அங்கீகாரம் பெற்றது .குடிநீர் சோதனைக்காக இலங்கையில் உள்ள திறன் ஆய்வகங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது.இது நீரினால் பரவும் நோய்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு பங்களிக்கின்றது.இதன் விளைவாக மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துவதோடு நீர் மாசுபாடு குறைவதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் நன்மைகளும் அதிகரிக்கின்றது.
கெத்கேன நீர் சுத்திகரிப்பு திட்டத்திற்கு 32 ரூபா மில்லியன் இந்திய வங்கிகள் மூலம் நிதியளிக்கப்பட்டது.பல ஆண்டுகளாக களுத்துறை மாவட்ட மக்கள் வறண்ட அசுத்தமான தண்ணீரையே பயன்படுத்துகின்றனர்.கொவிட் 19 தொற்றின் பரவலினால் முழு இலங்கையும் கடந்த மார்ச் மாதம் அளவில் முடக்கப்பட்ட வேளையில் மக்கள் தண்ணீர் எடுப்பதற்காக வெளியில் செல்வதில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.பேருவளை பன்னில பிரதேச மக்களும் இப்பிரச்சினையினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர்.இந் நீண்டகால பிரச்சினை குறித்து மக்களிடம் வினவிய போது, களுத்துறை வெட்டுமகடை பிரதேசத்தில் களுகங்கையோரமாக வசிக்கின்ற நாங்கள் பல காலமாக இப் பிரச்சினைக்கு முகம் கொடுத்து வருகின்றோம் .உப்பு தண்ணீரை குடிப்பதனால் பல்வேறு விதமான நோய்கள் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு வேளையில் பாதையோரங்களில் வைக்கப்பட்டிருந்த குழாய்களின் மூலம் தான் குடிநீரைப் பெற்றுக் கொண்டோம் .நாங்கள் கேட்டுக்கொள்வது இப் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை மாத்திரமே ஆகும் என்று தெரிவித்தனர்.எனவே இது குறித்து உரிய அதிகாரிகளிடம் வினவிய போது அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

” எமது கெத்கேன நீர் விநியோக நிலையத்தில் சராசரியான விநியோகம் சுமாராக கியூபக் மீட்டர் 50000 போன்ற அளவில் தான் எமக்கு கேள்விகள் இருக்கின்றன அந்த 50000த்தில் 25000/26000க்கான அளவு நீர் பேருவளை ,பயாகலை மற்றும் மக்கொனை போன்ற பிரதேசங்களுக்கும் எஞ்சியது 23000 அளவிலான நீர் களுத்துறை மற்றும் வாத்துவை பிரதேசங்களுக்கும் போம்புவல பிரதேசங்களுக்கும் கியுபக் மீட்டர் 2000 அளவிலும் தான் விநியோகம் இடம்பெறுகின்றது.
(மேனுக விஜயனாந்த)
   பிரதான பொறியியலாளர் கெத்கேன நீர் சுத்திகரிப்புத்திட்டம்)
அளுத்கமை ,மதுகம ,அகலவத்தை நீர் சுத்திகரிப்புத் திட்டமானது ஆரம்பிக்கப்பட்டது சராசரியாக 2017 ம் ஆண்டு மே மாதம் 15ம் திகதியாகும் .இந்த வருடத்துடன் மூன்று வருடம் பூர்த்தியாகின்றது.அதாவது 2020 மே மாதம் 15 ம் திகதி நிறைவுக்கு வர இருந்த இத்திட்டம் அசாதாரண சூழ்நிலை காரணமாக கொரோனா மற்றும் ஏனைய காரணங்களினால் தாமதமாகியது.எனினும் 2021 மார்ச் மாதம் முடிவுக்கு கொண்டுவருவதாகவே உத்தேஷிக்கப்பட்டுள்ளது.தற்போது 76% பகுதி நிறைவிற்கு வந்துள்ளது எஞ்சிய பகுதியும் எதிர்வரும் காலங்களில் நிறைவடையும் என்பது எதிர்பார்ப்பாகும்.
(சேனாதிலக ஹேவா சிங்கப்புலி.
துணை பொறியியலாளர்
கெத்கேன நீர்சுத்திகரிப்புத்திட்டம்)
களுத்துறை மாவட்ட தண்ணீர் பிரச்சினைக்கு நல்லாட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இச் சுத்திகரிப்புத் திட்டம் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் நிறைவுக்கு வரும் என்பது 100%நம்பிக்கையாகும் .அத்தோடு ,எமது ஊரின் ,மாவட்டத்தின் இப் பிரச்சினைக்கான தீர்வாக உள்ள கெத்கேன திட்டத்தில் இனணந்து பணியாற்றிய கடந்த அரசாங்கத்தில் இருந்த அதிகாரிகள் மற்றும் தற்போது பணியாற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு அடுத்த வருடத்துடன் இத்திட்டம் நிறைவடைந்து அனைத்து மக்களுக்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும் என தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆமிர் நஸீர்
(களுத்துறை நகர சபைத் தலைவர்).
தொகுப்பு:அப்ரா அன்ஸார்
Previous articleகொவிட் 19 சடலங்கள்;  சர்ச்சை மன்னாரிலிருந்து இரணைத்தீவுக்கு
Next articleகண்காணிக்கப்படும் கனேடிய உயரிஸ்தானிகர்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here