சஹரான் இந்நாட்டு முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவ படுத்தவில்லை

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதி சஹரான் இந்நாட்டு முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவ படுத்தவில்லை என்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் மற்றும் ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் தனது கருத்துக்களை தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் குறிப்பிடுகையில்,
சஹரான் கும்பலின் இன, மத அடையாளத்தை பயன்படுத்தி, முஸ்லிம் எதிர்ப்பு பேரினவாதத்தை தூண்டிவிட்டுதான், நல்லாட்சியை தோற்கடித்து, இந்த  கள்ளாட்சி, பதவிக்கு வந்தது. 
ஆகவே சஹரான் குண்டு வெடிப்பு, இந்த கள்ளாட்சிக்கு, பாரிய உதவியாக அமைந்துள்ளது. 
இன்று, குண்டு வெடிப்பை தடுக்க தவறியோர் பட்டியலை, ஆணைக்குழு  அறிக்கை தந்துள்ளது. 
அதில் முதலிடம் மைத்திரிபால சிறிசேன என்ற முன்னாள் ஜனாதிபதி மட்டுமல்ல, இந்நாள் ஆளுங்கூட்டணி தவிசாளர் மற்றும் மொட்டு கட்சியின் பொலன்னறுவை மாவட்ட எம்பியும், சபையில் ஆளும் தரப்பின் முதல் வரிசையில் அமர்ந்துள்ள முதல் எம்பி.  
குண்டு வெடிப்புக்கு சில மாதங்கள் முன்னர் அவர் நல்லாட்சியை தடாலடியாக கலைத்து, மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்து, ஒரு “அரசாங்கத்தை” 2018ம் வருடம் நியமிக்க முயன்றார் என்பதையும் மறக்க முடியாது.  
குண்டு வெடிப்பை தடுக்க தவறியோர் யார் என்பதை அடையாளம் காண்பதுடன், அதை விட, அதன் பின்னணியில் யார் இருந்தார்கள், அதன் மூலம் யார் பயன் பெற்றார்கள் என்ற கோணங்களிலும் ஆராய வேண்டும்.  
ஆகவே, “பேரினவாத பூமராங்” வளையம், அதை எறிந்த பேரினவாத மொட்டுகாரர்களை நோக்கியே, இப்போ திரும்பி வருகிறது. 
உயிர்த்த ஞாயிறு உதிர்த்த அப்பாவி உயிர்கள், எனது கொழும்பு கொச்சிக்கடையிலும்,  மட்டக்களப்பிலும் உயிரிழந்த தமிழ் கத்தோலிக்க உயிர்களின் ஆன்மாக்கள் சாந்தியடைய வேண்டி, “வினை விதைத்தோர், வினை அறுக்கும்”படலம் ஆரம்பமாகிறது..!
என்றும் தெரிவித்துள்ளார்.
Previous articleஇலங்கை முஸ்லிம்களின் உரிமையை பெற்றுக் கொடுங்கள்
Next article331 நாட்களின் பின்னர் கட்டாய தகனத்துக்கு முற்றுப்புள்ளி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here