331 நாட்களின் பின்னர் கட்டாய தகனத்துக்கு முற்றுப்புள்ளி!

கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் எந்த ஒரு நபரையும் அடக்கம் செய்யவோ அல்லது தகனம் செய்யவோ முடியும் என்ற அரசாங்கத்தின் தீர்மானம் புதிய வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
20121 பெப்ரவரி 25 ஆம் திகதியிடப்பட்ட 2216/38 ஆம் இலக்க வர்த்தமானி ஊடாக இந்த நிலைப்பாட்டை அரசாங்கம் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னி ஆரச்சியின் கையொப்பத்துடன் இரவு (25)10.00 மணியளவில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டது.
தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நோய் தடுப்பு கட்டளை சட்டத்தின் 2,3 ஆம் பிரிவுகளின் கீழ் இந்த வர்த்தமானி சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னி ஆரச்சியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
2170/8 எனும் வர்த்தமானி கடந்த 2020 ஏப்ரல் 11 ஆம் திகதி வெளியிடப்பட்ட நிலையில், அதற்கு மேலதிக திருத்தங்களை கொண்டுவந்தே, கொவிட் 19 தொற்றினால் மரணிக்கும் ஒருவரை அடக்கம் செய்யவோ அல்லது தகனம் செய்யவோ முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here