இலங்கை முஸ்லிம்களின் உரிமையை பெற்றுக் கொடுங்கள்

கொரோனா தொற்றினால் உயிரிழந்த ஜனாஸாக்கள் மீதான கட்டாய தகனங்களை நிறுத்துமாறு இலங்கை அரசிடம் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொது உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வின் உயர் மட்டப் பிரிவில் நேற்று (24) உரையாற்றிய OICயின் பொதுச் செயலாளர் டாக்டர் யூசுப் அல்  உஷைமீன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
OIC யில் அங்கத்துவம் இல்லாத முஸ்லிம் சமூகங்களின் நிலைமையை கண்காணிக்க OIC ஆர்வமாக இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்
கொரோனா தொற்றுக்கு இலக்கான உடல்களை (ஜனாஸாக்களை) அடக்கம் செய்வதற்கான உரிமை இலங்கையில் உள்ள முஸ்லிம்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதால், இலங்கை முஸ்லிம் சமூகத்தின் நிலை  குறித்து ஓ.ஐ.சி கவலை அடைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் குறிப்பிடுகையில், 
இலங்கை உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டல்களை பின்பற்றியே செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
முஸ்லிம்கள் அவர்களது இறுதிச் சடங்குகளை அவர்களது மத நம்பிக்கையின் அடிப்படையில் செய்வதற்கும், அடக்கம் செய்கின்ற உரிமையை உத்தரவாதம் செய்வதற்கும் விரைவான நடவடிக்கைககளை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Previous articleமீள பி.சி.ஆர்.  செய்யக் கோரும் ரிட் மனு ; விசாரணைகளுக்கு ஏற்காது தள்ளுபடி
Next articleசஹரான் இந்நாட்டு முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவ படுத்தவில்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here