அனைவரையும் மக்களாகப் பாருங்கள் – எம்.ஏ.சுமந்திரன்

எண்ணிக்கையில் குறைவானவர்களாக இருக்கின்றோம் என்பதற்காக பேரினவாதத்தை மேலோங்கச் செய்து ஏனைய மக்களை பிரித்தாளுகிறார்கள், அதற்கு இடமளிக்க முடியாது என்பதாக எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
“பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி” வரையிலான மாபெரும் கவனயீர்ப்புப்   போராட்டம் காத்தான்குடியை கடந்துசெல்லும் போது எம். ஏ. சுமந்திரன் இஸ்லாமிய சகோதரர்கள் செறிந்து வாழும் காத்தான்குடியில் திரளாக வந்து ஆதரவளித்தமைக்காக நன்றி செலுத்தும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
“எப்படியாக ஜனாஸா எரிப்பிற்கு எதிராக நாங்கள் குரல் கொடுக்கின்றோமோ அதே போல தமிழ் மக்களுடைய எல்லா அரசியல்  உரிமைகளும்  மீறப்படுவதற்கு எதிராக நீங்களும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்” என்றும் முஸ்லிம் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here