சொத்து விபரங்களை அறிவித்த எம்.பி.க்களின் பெயர்களை வெளிப்படுத்தவும்

2010 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையில், சொத்துக்கள், பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை அறிவித்த பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை வெளிப்படுத்துமாறு தகவலறியும் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
ஊடகவியலாளர் ஒருவரினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டின் மீதான விசாரணைகளின் பின்னரே ஆணைக்குழு இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
‘அத’ சிங்கள மொழி பத்திரிக்கையின் ஊடகவியலாளரான சாமர சம்பத்தினால் , 2010 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையில் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான விபரங்களை வழங்கியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்பட்டியலை வழங்குமாறு முன்வைக்கப்பட்ட வேண்டுகோளை, பாராமன்ற தகவல் வெளியீட்டு பிரிவின் அதிகாரி நிராகதித்திருந்தார்.
இந்த விபரங்கள் அவசியமெனில் 1975 ஆம் ஆண்டின் 01 இலக்க சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் சட்டவிதிகளுக்கமைய சபாநாயகரிடமே பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்ததாக கூறி மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தகவலறியும் ஆணைக்குழுவில் கடந்த 2018 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த மேன் முறையீடு தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வந்ததுடன் , நேற்றைய தினம் அதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதன்போது , பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான விபரங்களை தான் கேட்கவில்லை என்றும் , இது தொடர்பான விபரங்களை அறிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை மாத்திரமே கேட்டதாகவும் ஊடகவியலாளர் மேன் முறையீட்டு விசாரணைகளின் போது தெரிவித்திருந்தார்.
மேன்முறையீடு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது , பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வருகைத்தந்திருந்த அதிகாரிகள் , பாராளுமன்றத்தின் சபாநாயகர் மற்றும் பொதுச் செயலாளரின் காரியாலயங்கள் தனித்து செயற்படுவதானால் , சபாநாயகரின் காரியாலயத்தின் ஊடாகவே தகவலறிய முடியும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன்போது , சபாநாயகரின் காரியாலயத்தில் தகவல் வெளியிடும் பிரிவில் ஒருவரும் செயற்படவில்லை என்றும் , பாராளுமன்றத்தின் நிர்வாக செயற்பாடுகள் அனைத்தும் பொதுச்செயலாளர் காரியாலயத்திலே இடம்பெற்று வருவதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சொத்துகள் மற்றும் பொறுப்புகள் சட்டத்திக்கீழ் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடியும் என்றும் , அதனுடன் தொடர்புடைய நபர்களின் பெயர்விபரங்களை தகவலறியும் சட்டத்தின் ஊடாகவே பெற்றுக் கொள்ள முடியும் என்றும் ஆணைக்குழுவில் சுட்டிக்காட்டப்பட்டது.
பின்னர் , மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் அவர்களின் கடமை மற்றும் வெளிப்படைத்தன்மை தொடர்பில் மக்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றும் ஆணைக்குழு தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பில் 26 பக்கங்களில் ஆணைக்குழு விளக்கமளித்திருந்ததுடன் , ஊடகவியலாளரின் வேண்டுகோளின் பிரகாரம் தகவலை வெளியிடுமாறும் உத்தரவிட்டுள்ளது.
Previous articleஅனைவரையும் மக்களாகப் பாருங்கள் – எம்.ஏ.சுமந்திரன்
Next articleமின்சார கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது- ஜனக ரத்நாயக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here