3 ஆவது பிணை முறி மோசாடி : 11 குற்றச்சாட்டுக்களிலிருந்து ரவி , அர்ஜுன மகேந்ரன் உட்பட 10 பேர் விடுதலை

மத்திய வங்கி பிணை மோசடி நடவடிக்கை விவகாரத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்ரன் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், 11 குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

2016 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி நடாத்தப்பட்ட மூன்றாவது பிணை முறிகள் ஏலத்தின் போது இடம்பெற்ற மோசடி ஊடாக 15 பில்லியன் ரூபா அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் 22 குற்றச்சாட்டுக்களின் கீழ் இந்த வழக்கு இந்த 10 பேருக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந் நிலையிலேயே அதில் 11 குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர்கள் அனைவரையும் விடுதலை செய்வதாக மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா தலைமையில் நாமல் பண்டார பலல்லே மற்றும் ஆதித்ய பட்டபெத்தி ஆகிய நீதிபதிகளை உள்ளடக்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

2016 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி மத்திய வங்கியின் முறிகள் ஏலத்தின் போது இடம்பெற்ற மோசடி தொடர்பில் பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனம் , முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரிக்க மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா தலைமையில் நாமல் பண்டார பலல்லே மற்றும் ஆதித்ய பட்டபெத்தி ஆகிய நீதிபதிகளை உள்ளடக்கிய சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

வழக்கின் 3 ஆம் பிரதிவாதி அர்ஜுன மகேந்ரன் மற்றும் 9 ஆம் பிரதிவாதி அஜான் புஞ்சி ஹேவா ஆகியோர் மன்றை புறக்கணித்து வரும் நிலையில், அவர்கள் வெளிநாடுகளில் உள்ளனர். அத்துடன் பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனமும் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளது.

இதனைவிட இக்குற்றம் இடம்பெற்றதாக கூறப்படும் காலப்பகுதியில் நிதி அமைச்சராக செயற்பட்ட சந்தேஷ் ரவீந்ர கருணாநாயக்க எனும் ரவி கருணாநாயக்க, பேபசுவல் ட்ரசரீஸ் நிறுவன முன்னாள் பணிப்பாளர் அர்ஜுன் ஜோஸப் அலோசியஸ், பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவன முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி பலிசேன அப்புஹாமிலாகே கசுன் ஓஷத பலிசேன, பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்களான ஜெப்ரி ஜோஸப் அலோசியஸ், சித்ர ரஞ்சன் ஹுலுகல்ல, முத்து ராஜா சுரேந்ரன், ஊழியர் சேம இலாப நிதியத்தின் அப்போதைய பிரதானி பதுகொட ஹேவா இந்திக சமன் குமார ஆகிய 7 பிரதிவாதிகளும் இவ்வழக்கின் பிரதிவாதிகள் பட்டியலில் உள்ளடங்குகின்றனர்.

பிரதிவாதிகளுக்கும் எதிரான வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா தலைமையில் நாமல் பண்டார பலல்லே மற்றும் ஆதித்ய பட்டபெத்தி ஆகிய நீதிபதிகளை உள்ளடக்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்றம் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த தவணையின் போது, இவ்வழக்கில் பிரதிவாதிகளுக்காக ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன, ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன உள்ளிட்டவர்கள் அடிப்படை ஆட்சேபனைகளை முன் வைத்திருந்தனர்.

பிரதிவாதிகளுக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை முன்னெடுத்து செல்ல முடியாது என அவர்கள் தமது வாதங்கள் ஊடாக இந்த அடிப்படை ஆட்சேபனங்களை முன் வைத்தினருந்தனர்.

அதன்படி, அந்த அடிப்படை ஆட்சேபனங்கள் குறித்த நீதிமன்றின் உத்தரவு இன்று ( 6) அறிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரிக்கும் சிறப்பு டரயல் அட்பார் நீதிகள் குழாமின் உறுப்பினரான நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே இந்த உத்தரவை அறிவித்தார்.

அதன்படி பிரதிவாதிகளுக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள 22 குற்றச்சாட்டுக்களில் 11 குற்றச்சாட்டுக்களை முன்னெடுத்து செல்ல முடியாது என அவர் இதன்போது அறிவித்தார். அதனல் அந்த 11 குற்றச்சட்டுக்களிலிருந்தும் அனைத்து பிரதிவதிகளையும் விடுவிப்பதாக அவர் உத்தரவிட்டார்.

இதன்போது வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபருக்காக மன்றில் ஆஜராகியிருந்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி பிரியந்த நாவான, பிரதிவாதிகளுக்கு எதிரான 22 குற்றச்சாட்டுக்களில் 11 குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர்களை நீதிமன்றம் விடுதலைச் செய்துள்ளதால், சட்ட மா அதிபர் அந்த பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்த குற்றப் பகிர்வுப் பத்திரத்தை திருத்துவதா?, மீளப் பெறுவதா? மாற்று சட்ட நடவடிக்கைகளை கையாள்வதா என்பதை தீர்மானிப்பதற்காக திகதியொன்றினை தருமாறு கோரினார்.

அதனை ஏற்ற நீதிமன்றம் இந்த வழக்கை எதிர்வரும் 2022 ஜனவரி 26 ஆம் திகதி அது தொடர்பில் விசரணைக்கு எடுப்பதாக அறிவித்தது.

Previous articleஅசாத் சாலி விடுவித்து விடுதலை; கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு; முசம்மில், ஜயநந்த, நிமலுக்கு மன்றில் ஆஜராக அறிவித்தல்
Next article‘யுகதனவி’ மனுக்கள் : சட்ட மா அதிபரின் ஆட்சேபனையும் மனுதாரர் தரப்பின் வாதங்களும் ; இரு நாட்கள் பரிசீலனையின் முழு விபரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here