‘ஒரே நாடு ஒரே சட்டம்’; பௌத்தமயமாக்கலுக்கு வழிசெய்யும்: ஞானசார தேரரின் கருத்துக்கு அருட்தந்தை சக்திவேல் பதிலடி

(தர்ஷிகா செல்வச்சந்திரன்)

ஞானசார தலைமையிலான ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியானது தனது தனது முதலாவது பணியினை வடக்கில் ஆரம்பித்துள்ளது.

அதற்கமைய இந்த ஒரே நாடு ஒரே சட்டம் செயலணிக்கு வடக்கு மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து கொள்வதற்கு வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டு யாழ். தனியார் விடுதியொன்றில் செய்தியாளர் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

‘ஒரு நாடு ஒரு சட்டம் இந்த செயலணியின் உறுப்பினர்களான யோகேஸ்வரி பற்குணராஜா, ஜயம்பிள்ளை தயானந்தராஜா உள்ளிட்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது, இந்த செயலணி தொடர்பில் யாழ்ப்பாண தேச வழமைச் சட்டத்தில் உள்ள பொதுவான நல்ல விடயங்களையும் கண்டி, முஸ்லிம் சட்டத்திலுள்ள குறைபாடுகளை களைந்து சிறந்த பொதுவானதொரு சட்டத்தை இந்த செயலணியினூடாக பெற்றுக்கொள்வதே எமது எதிர்பார்ப்பாகும் என கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல இந்த செயலணியின் மூலம் சிறுபான்மை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில், சில விடயங்களை ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் போதைப் பொருளால் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். விளக்கேற்றுவதற்காக கேட்கும் அரசியல்வாதிகள் போதைப் பொருள் தடுப்பு மத்திய நிலையத்தை உருவாக்க தயாரில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு நாடு ஒரு சட்டம் செயலணியில் தமிழர்களை முதலில் சேர்க்காமல் எதிர்ப்புக்கள் வந்த பின்னர் சேர்த்தமை தொடர்பில், இந்த செயலணியை ஆரம்பித்த பொழுது பிரச்சனை ஒன்றாகவே இருந்தது.

அந்த சந்தர்ப்பத்தில் தமிழர்களை நியமிக்கவேண்டிய தேவையிருக்கவில்லை. பொதுவாகவே தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் ஓரே பிரச்சினையே காணப்படுகிறது.

அந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களை தெரிவு செய்ய வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. முஸ்லிம்களுக்கு பல சட்டங்கள் இருப்பதால் அந்த சட்டத்தை பொதுச் சட்டத்தின் கீழ் கொண்டுவர விரும்பினோம். பல்வேறு சட்டங்கள் இருப்பதால் அதனை ஒரு சட்டமாக்க விரும்புகிறோம்.

தேசவழமைச் சட்டத்தில் உள்ள நல்லதையும் பெறவேண்டும். கண்டியச் சட்டம் முஸ்லிம் சட்டம் ஆகியவற்றில் உள்ள நல்லதையும் பெற்று சிறந்த சட்டத்தை ஏற்படுத்துவோம்.

எல்லா சட்டங்களிலும் இருக்கின்ற நல்ல விடயங்களை சேர்த்து ஒரே சட்டத்தை உருவாக்க வேண்டும் எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் நடைபெற்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருப்பதற்காக ‘ஒரே நாடு ஒரே சட்டத்தை’ உருவாக்க இந்த செயலணி தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதை விட முக்கியமானது அரசியல் கைதிகள் விரைவில் செய்யப்படவுள்ளதாகவும் தொல்பொருள் தினைக்களங்களின் நடவடிக்கை பௌ;த விகாரைகளை அமைப்பது, மத வழிபாடுகள் மறுக்கப்படுவது தொடர்பான பிரச்சினை மாவீரர் தினம் தொடர்பிலும் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது, அரசியல் கைதிகள் தொடர்பாக உள்ளே இருப்பவர்கள் தொடர்பல் ஜனாதிபதி சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பேசியுள்ளதாகவும், மிக விரைவில் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல தமிழ் மக்களுக்காக வழிபாட்டு உரிமைகள் மறுக்கப்படும் பிரதேசங்களை பார்வையிடுவதாகவும், குருந்;தூர் மலை மற்றும் கதிர்காமம் போன்று இரு மதத்தினரும் வழிபடக்கூடிய நிலை வருவதனை தான் விரும்புவதாகவும் ஞானசார குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விடுதலைப்புலிகள் இந்த நாட்டில் ஆயுத ரீதியிமாக மேற்கொண்ட விடயம் தவறென்றும் அதற்கு அனுமதிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் இவற்றை யெல்லாம் மறந்து எம்முடன் தமிழ் மக்கள் பயணிக்க வேண்டும் என தேரர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும்,யாழ்ப்பாண தேசவழமைச்சட்டம் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இருக்கும் சரிஆ சட்டத்தை இல்லாதொழித்து, சைவர்கள், மற்றும் கிறிஸ்தவர்களுக்கான மோதலை ஏற்படுத்தவே இவ்வாறான நிகழ்வு இடம்பெறப்போகின்றது என முன்னாள் அரசியல் கைதியொருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

என்ன இருந்தபோதிலும் இந்த விடயம் தொடர்பாக அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் அவர்களிம் கேட்டபோது, யுத்த கால அனுபவங்களை மறந்து விடவேண்டும் என ஞானசார தேரர் கூறுகின்றார்.

ஆனால் அதுபோல எங்களால் மறக்க முடியாது, மறக்காமல் இருந்தால் மேலும். பயங்கரமான சூழலை ஏற்படுத்தக்கூடும். இதன்மூலம் அவர் அரசாங்கத்தால் கிடைக்கவிருக்கும் நீதியைப்பெற்றுக்கொள்ள முடியாமல் போகக்கூடும் என்பதுடன் மறந்துவிட எவ்வாறு முடியும் என அருட்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

30 வருடங்கள் இடம்பெற்ற யுத்தத்தை மறந்துவிட வேண்டும் என்று ஞானசார தேரர் கூறுவதற்கு அவருக்கு என்ன உரிமை உள்ளது.

அதாவது ஏற்கனவே நீதிமன்றத்தால் தண்டனைக்குட்படுத்தப்பட்ட ஒருவர் நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் இன மற்றும் மதவாத கருத்துக்களை பிரச்சாரம் செய்யும் தேரரான இவர் யுத்தம் தொடர்பாக அனைத்தையும் மறந்துவிடக்கூறுகின்றார் ஆனால் இவற்றை மறக்க முடியாமல் போனால் என்னவாகும்? இன்னொரு பயங்கரமான பக்கத்தை உருவாக்கும்.

இதன் மூலம் அவர் எதிர்காலத்தில் பௌத்தமயமாக்கலையே உருவாக்குவதற்கு வழிசெய்யும் அதுபோல தமிழ் சிறைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் ஞானசார தேரருக்கு எந்தவொரு வகிபாகமும் இல்லை.

அண்மையில் 16 அரசியல் கைதிகளை விடுவித்தது கூட நீதிமன்ற உத்தரவுக்கமைய 8 மாதத்தில் விடுவிக்கப்படக் கூடியவர்களே, எனினும் மரண தண்டனை குற்றவாளியான துமிந்த சில்வா விடுதலை செய்ததற்காகவே அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கினால் மட்டுமே இந்த அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்.

அதுபோல காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை அண்மையில் ஜனாதிபதி சந்திப்பார் என்று ஊடகங்கள் வாயிலாக கூறினாலும் அது நடைமுறையில் சாத்தியப்படவில்லை. அனைத்தும் ஏமாற்று வேலைகளே.

வெளிநாடுகளில் நாங்கள் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கு மரண சான்றிதழ் மற்றும் அவர்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகையை வழங்குவோம் என்று அரசாங்கம் கூறினாலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கு தேவை நிதி அல்ல நீதியே. அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான விடயமே ஆகும். எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே ஞானசார தேரரின் மூலம் நாட்டை பௌத்தமயமக்கலை முன்னெடுக்கவும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் பிரச்சினைகளை திசைதிருப்பவுமே இந்த நடவடிக்கை என்றும் அருட்தந்தை சக்திவேல் குறிப்பிட்டுள்ளார்.

Previous article‘ஒரே நாடு ஒரே சட்டம்’: மனித உரிமைகள் விடயத்திற்கு எதிரானதாகும்
Next articleபொலிஸ் பொறுப்பதிகாரி தாக்கினார்- பளை பிரதேசவாசிகள்: முகக் கவசம் அணியாததால் தாக்கப்பட்டனர் – பொலிஸ் !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here