அரசியலமைப்புக்கு உட்பட்டா  துமிந்தவுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது? ; நீதிபதிகளின் பரிந்துரைகள் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கேள்வி

பொது மன்னிப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த குற்றவாளியான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா விவகாரத்தில் ஜனாதிபதி அரசியலமைப்புக்கு உட்பட்டா செயற்பட்டார் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி அச்சங்கம் இது தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளது.

எந்த அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டார்?:

பொதுமன்னிப்பு வழங்குவதற்கு துமிந்த சில்வா எந்த அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டார்?, என்பதை விளக்கி பதிலளிக்குமாறு கோரி 6 கேள்விகளை ஜனாதிபதியிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன் வைத்துள்ளது. அவைகுறித்த விபரங்களைப் தமக்கும் பொதுமக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும்  அச்சங்கம் வலியுறுத்துகிறது..
அந்த கேள்விகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் திருப்திகரமானவையாக அமையாதபட்சத்தில், துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு நியாயமற்றது என்றும் அது சட்டத்தின் ஆட்சியும் நீதித்துறையின் மீதும் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை சீர்குலைவதற்கே வழிவகுக்கும் என்றும் சட்டத்தரணிகள் சங்கம் ஜனதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

பொசொன் போயா தினமான நேற்று (24) பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்ட கைதிகளுக்கு  மேலதிகமாக துமிந்த சில்வாவும் விடுதலை செய்யப்பட்டார். இதுகுறித்து சட்டத்தரணிகள் இது பல்வேறு அதிர்வலைகளை ஏர்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சன்ங்கம் நேற்று மாலை  ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றினை அனுப்பிய்து.

மன்னிப்பு தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ள நிறைவேற்றுக் குழு:

சட்டவிரோதமான ஒன்றுகூடலில் அங்கம் வகித்தமை மற்றும் கொலைக்குற்றச்சாட்டின் அடிப்படையில் மேல்நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அந்தத் தீர்ப்பு முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் குழுவினால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு தண்டனைக்குள்ளான துமிந்த சில்வா ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ள விடயம் தொடர்பில்  சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு ஆராய்ந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு அதிகாரம்:

ஜனாதிபதி இத்தகைய பொதுமன்னிப்பை வழங்குவதற்கு இலங்கை அரசியலமைப்பின் 34(1) ஆம் உறுப்புரையின் கீழ் அனுமதியளிக்கப்பட்டிருக்கும் அதேவேளை, அதில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு அமைய குறித்த வழக்கை நடத்திய நீதிபதியிடமிருந்து அறிக்கை பெறப்பட வேண்டும். பின்னர் அந்த அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படுவதுடன் சட்டமா அதிபர் மற்றம் நீதியமைச்சர் ஆகியோரின் ஆலோசனையும் பெறப்பட வேண்டும். அவர்கள் இருவரும் அதுகுறித்த தமது பரிந்துரைகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

சட்டத்தரணிகள் சங்கத்தின் கடிதம்:

அரசியலமைப்பின் 34(1) ஆம் சரத்தின் கீழ் பொதுமன்னிப்பு வழங்குவதற்கு துமிந்த சில்வா எவ்வடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டார்?, இந்தப் பொதுமன்னிப்பை வழங்கும்போது கவனத்தில்கொள்ளப்பட்ட பிரதான விடயங்கள், தற்போது மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏனையோரின் வழக்குகளிலிருந்து துமிந்த சில்வாவின் வழங்கு விலக்களிக்கப்படுவதற்கான காரணம், துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு முன்னர் ஜனாதிபதியினால் இந்த வழக்கை விசாரணை செய்து தீர்ப்பளித்த நீதிபதிகளிடம் அறிக்கை கோரப்பட்டதா? ஆமெனில், அந்த அறிக்கையின் உள்ளடக்கம் என்ன?, இந்தப் பொதுமன்னிப்பு தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டதா? ஆமெனில், அதன் உள்ளடக்கம் என்ன?, இந்தப் பொதுமன்னிப்பு தொடர்பில் நீதியமைச்சரிடம் பரிந்துரைகள் கோரப்பட்டதா? ஆமெனில், அதன் உள்ளடக்கம் என்ன? ஆகியவை தொடர்பில் வெளிப்படுத்த வேண்டும் என அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
இந்தக் கேள்விகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் திருப்தியளிக்கவில்லை எனின், துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு நியாயமற்றதும் தன்னிச்சையானதுமாகும். அது சட்டத்தின் ஆட்சி சீர்குலைவதற்கும் நீதித்துறையின் மீது பொதுமக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை வீழ்ச்சிகாண்பதற்குமே வழிவகுக்கும் என்று குறித்த கடிதம் தொடர்பில் அரிக்கை ஒன்றினை வெலியிட்டுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரிவித்துள்ளது.
Previous articleசாட்சிகளின் சுருக்கத்தை மன்றில் சமர்ப்பிக்குக;  அஹ்னாப் விவகாரத்தில் மன்றில் ஆஜராகி விளக்கமளிக்க சி.ரி.ஐ.டி.க்கு நீதிமன்றம் உத்தரவு
Next articleஏழு நீதிபதிகளின் தீர்ப்பை கணக்கில் கொள்ளாது துமிந்த சில்வா விடுதலை ! (முழு விபரம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here