22 உறுப்பினர்களைக் கொண்ட கோப் குழு நியமனம்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவுக்கு (கோப்) நியமிக்கப்பட்டுள்ள 22 உறுப்பினர்களின் பெயர் விபரம் இன்று (11) வெளியிடப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதி முன்வைக்கப்பட்ட 22 உறுப்பினர்கள் அடங்கிய குழுவுக்கு பாராளுமன்ற அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

22 உறுப்பினர்கள் அடங்கிய கோப் குழுவில்,
1.    மஹிந்த அமரவீர
2.    மஹிந்தானந்த அளுத்கமகே
3.    ரோஹித அபேகுணவர்தன
4.    சுசில் பிரேம்ஜயந்த
5.    ஜயந்த சமரவீர
6.    திலும் அமுனுகம
7.    இந்திக அனுருத்த
8.    சரத் வீரசேகர
9.    டீ.வி சானக
10.    நாலக கொடஹேவா
11.    அஜிட் நிவாட் கப்ரால்
12.    றவூப் ஹக்கீம்
13.    அனுர திசாநாயக்க
14.    பாட்டலி சம்பிக ரனவக
15.    ஜகத் புஷ்பகுமார
16.    எரான் விக்ரமரத்ன
17.    ரஞ்சன் ராமநாயக்க
18.    நளின் பண்டார
19.    எஸ்.எம். மரிக்கார்
20.    பிரேம்நாத் சி தொலவத்த
21.    எஸ்.ஆர். ராசமாணிக்கம்
22.    சரித்த ஹேரத்

கோப் குழுவின் தலைவர், குழுவின் முதலாவது ஒன்றுகூடலிலேயே தெரிவுசெய்யப்படுவார்.

பாராளுமன்ற சபைக்குழு மற்றும் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர்கள்,

கௌரவ அருந்திக்க பெர்னாண்டோ, கௌரவ நிமல் லன்ஸா, கௌரவ காஞ்சன விஜேசேகர, கௌரவ பியல் நிஷாந்த டி. சில்வா, கௌரவ (டாக்டர்) சீதா அரம்பேபொல, கௌரவ ஜே.சீ. அலவத்துவல, கௌரவ (மேஜர்) பிரதீப் உந்துகொட, கௌரவ ஜகத் குமார, கௌரவ கிங்ஸ் நெல்சன், கௌரவ முதிதா பிரசாந்தி, கௌரவ நளின் பெர்னாண்டோ, கௌரவ அலி சப்ரி ரஹீம், கௌரவ மர்ஜான் பளீல் மற்றும் கௌரவ டயனா கமகே ஆகியோர் பாராளுமன்ற சபைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக கீழே குறிப்பிடப்பட்டுள்ள உறுப்பினர்கள் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள்;

கௌரவ எம்.யு.எம். அலி சப்ரி, கௌரவ விஜித பேருகொட, கௌரவ கனக ஹேரத், கௌரவ தாரக பாலசூரிய, கௌரவ அனுராத ஜயரத்ன, கௌரவ கபீர் ஹஷீம், கௌரவ (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ, கௌரவ ஜீ.ஜீ. பொன்னம்பலம், கௌரவ அ. அரவிந்த் குமார், கௌரவ வேலு குமார், கௌரவ கோகிலா குணவர்தன, கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன், கௌரவ ஷான் விஜயலால் த சில்வா, கௌரவ சி.வி. விக்னேஸ்வரன், கௌரவ கெவிந்து குமாரதுங்க, கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார ஆகியோராவர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here