மின்னியளாலர்களுக்கு நிரந்தர தொழிற் திட்டம்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தனது 2021 ஆம் ஆண்டிற்கான செயற் திட்ட அறிக்கையை வெளியிட்டு வைத்துள்ளது.
குறிப்பாக 45000 மின்னியலாளர்களின் தொழில்முறை உரிமத் திட்டம் ஆபத்தில் இருந்த நிலையில் அவர்களின் நிரந்தர தொழில் திட்டம் தொடர்பாக விஷேட அவதானம் செலுத்தப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார தொழில், நீர் சேவை தொழில் மற்றும் பெற்றோலிய துறை ஆகிய துறைகளில் சேவை தரம் மற்றும் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு என்ற அடிப்படையில் மொத்தமாக 111 திட்டங்கள் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும்.
குறித்த ஆணைக்குழுவினால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மின்சார தொழில்துறையின் உற்பத்தித்திறனை அதிகரித்தல், நுகர்வோருக்கு குறைந்த விலையில் மின்சாரம் வழங்குதல், மின்சாரம் வழங்கும் நிறுவனங்களின் நிதி நிலையை சீரான மட்டத்தில் பராமரித்தல், தொழில்துறையை பராமரித்தல் போன்ற நான்கு முக்கிய நோக்கங்களின் கீழ் மின்சார தொழில் தொடர்பான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
மின்சாரத்தைப் பாதுகாத்தல் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல். இந்த ஆண்டு, மின்சார நுகர்வோர் முறைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகளை விரைவாக தீர்க்கும் வகையில் நான்கு சிறப்பு திட்டங்கள் செயற்படுத்தப்படுத்தப்படவுள்ளன.
இதன்படி, மின்சார கம்பங்கள் மற்றும் கேபிள்களை நிறுவுதல், அதனை மாற்றும்போது மின்சார நுகர்வோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்க பிரதேச செயலாளர்களுடன் இணைந்து ஒரு கூட்டு திட்டம் தொடங்கப்படும்.
தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு செய்த அடுக்கு மாடி வீடுகளுக்கு மின்சாரம் பெறுவதில் எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த ஆண்டு, வீதி விளக்கு அமைப்புகளை நிறுவுதல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றுக்கான தரத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் நாட்டின் வீதி விளக்கு அமைப்பை திறமையாக பராமரிக்க ஒரு சிறப்பு திட்டம் தொடங்கப்படும்.
மின்சார பாதுகாப்பின் இலக்கை அடைய, ஆணைக்குழு மின்சார உரிமத் திட்டத்தினை வழங்க அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. நாட்டில் சுமார் 45,000 மின்னியலாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், அவர்களுக்கு நிரந்தரமான தொழில் உரிமத்தைப் பெறுவதற்குத் தேவையான அடிப்படை தகுதி, விரைவாகவும் இலவசமாகவும் தேசிய தொழில் தகுதி அல்லது என் வீ கிவ் 3 வழங்குவதற்கான திட்டம் தொடங்கப்படும். இந்த திட்டம் மூன்றாம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழு மற்றும் தேசிய தொழில் பயிற்சி ஆணைக்குழு கையெழுத்திடப்பட்ட சிறப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.
மசகு எண்ணெய் சந்தையின் நிழல் ஒழுங்குறுத்துகை நிறுவனமான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, உராய்வுநீக்கி எண்ணெய் சந்தையை ஒழுங்குறுத்துகை செய்வதில் எரிசக்தி அமைச்சுக்கு உதவுகிறது. தரமற்ற மசகு எண்ணெய் விற்பனை மற்றும் சட்டவிரோத மசகு எண்ணெய் விற்பனையை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட திட்டங்கள் மேலும் பலப்படுத்தப்படும்.
நிராகரிக்கப்பட்ட மசகு எண்ணெய் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் அப்புறப்படுத்துவதற்கான திட்டமும் நடந்து வருகிறது. கூடுதலாக, பெற்றோலிய நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் குறைகளைத் தீர்ப்பதற்கும் ஒரு முறைமை அறிமுகப்படுத்தப்படும்.
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு என்பது நாட்டின் நீர் சேவைத் துறையை ஒழுங்குபடுத்துவதற்கான நியமிக்கப்பட்ட அமைப்பாகும். அதன்படி, நீர் சேவைத் துறையின் முன்னேற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு அமைச்சு மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு உதவுகிறது. நீர் நுகர்வோர் முறைப்பாடுகளையும் மற்றும் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான ஒரு வழிமுறையையும், நீர் நுகர்வோர் உரிமைகள் பிரகடனத்தையும் அறிமுகப்படுத்த ஆணைக்குழு நீர் வழங்கல் அமைச்சுற்கு உதவுகிறது. மேலும், நீர் நுகர்வோர் பிரச்சினைகளை அடையாளம் காண உள்ளூர் மட்டத்தில் தொடர்ச்சியான பொதுமக்களிடம் ஆலோசனைகளை கேட்கும் நிகழ்வுகளின் இரண்டாம் கட்டம் இந்த ஆண்டு தொடங்கப்படும்.
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு 2021 ஆம் ஆண்டிற்காக திட்டமிட்ட அனைத்து செயற் திட்ட நடவடிக்கைகளையும் விரைவுபடுத்தவும் வெற்றிகரமாக செயற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கும் என்பதாகவும் அந்த அறிக்கையிலே சுட்டிக்காட்டியுள்ளது.
Previous articleமின்சார கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது- ஜனக ரத்நாயக்க
Next articleஉடல்களை அடக்கம் செய்யலாம் – மகிந்த ராஜபக்ஷ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here