உடல்களை அடக்கம் செய்யலாம் – மகிந்த ராஜபக்ஷ

தொற்றுநோயால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படுமா என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் இன்று (10) பாராளுமன்றத்தில் வினா எழுப்பினார்.இதற்கு பதிலளித்த பிரதமர்  மகிந்த ராஜபக்ஷ  உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
நீர் மூலமாக கொவிட் தொற்று  பரவுவதில்லை என்பதாக  தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே நேற்று (9)  பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இதனை மேற்கோற்காட்டி கொவிட் காரணமாக இறப்பவர்களின் உடல்களை ஏன் அடக்கம் செய்வதில்லை என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ விடம் மரிக்கார் எம்.பி வினா எழுப்பினார். இதன் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எஸ்.எம்.மரிக்கார் : மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே ரோஹன் பன்டார அவர்களுக்கு பதிலளிக்கும் போது நீரினூடாக கொவிட் பரவுவதில்லை என்பதாக தெரிவித்தார். அப்படி என்றால் இப்போதாவது உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படுமா என்று கேட்பதற்கு விரும்புகின்றோம்.
சபாநாயகர் : இது பாராளுமன்ற விதிகளுக்கு உட்பட்ட வினா அல்ல. தேவையற்ற கேள்வியொன்றை கொண்டு வருகிறீர்கள்
மகிந்த ராஜபக்ஷ: நீங்கள் எழுப்பிய வினாவிற்கு நான் சொல்ல விரும்புவது உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது என்பதாகும்.
இதனைத் தொடர்ந்து விஞ்ஞான ரீதியான காரணங்களின் அடிப்படையில் கொவிட் சடலங்களை புதைப்பதற்கு அனுமதியளித்த பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
கொவிட் தொற்றுநோயால் இறந்த முஸ்லிம்களின் உடல்கள் குளிரூட்டும் பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் அண்மையில் அறிவித்தது.  இவ்வாறு கொவிட் தொற்று நோயால் இறந்தவர்களின் உடல்கள் குறித்து அதிகமான உரையாடல்கள் இடம்பெற்று வந்த நிலையில் இது தொடர்பாக ஒரு முடிவை எடுக்க சுகாதார அமைச்சு ஒரு நிபுணர் குழுவையும் நியமித்திருந்தது.
Previous articleமின்னியளாலர்களுக்கு நிரந்தர தொழிற் திட்டம்
Next articleவடகிழக்கில் மட்டும் பாதுகாப்பு முகாம்கள் அதிகரிக்கப்படுவது எதனால் – சபையில் சாணக்யன் கேள்வி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here