மியன்மார் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளின் கைதானது ஜனநாயகத்திற்கு விடுக்கும் அச்சுறுத்தல்

APTOPIX Myanmar (Copyright 2021 The Associated Press. All rights reserved.)
தேர்தல் விதிமுறைகளையும் சட்ட திட்டங்களையும் பின்பற்றி தமது கடமைகளைச் செய்த மியன்மார் தேர்தல் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளமையானது ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தலாகும்.
இலங்கை தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மியன்மாரில் இடம்பெற்ற தேர்தலைத் தொடர்ந்து இராணுவத்தினரால் ஜனநாயக ஆட்சி இல்லாமலாக்கப்பட்டுள்ளது.இது மிகவும்  கவலையான ஒரு விடயமாகும். 
மியன்மார் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் தமது கடமைகளைச் செய்ததற்காக இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். ஆணைக்குழுவின் தலைவர் யு ஹலா தெய்ன் உட்பட மற்றும் பல அதிகாரிகள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளை கைது செய்வதானது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று சுட்டிக் காட்டியுள்ள இலங்கை தேர்தல் ஆணைக்குழு அவர்களுக்கான விடுதலையை உடனே வழங்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கோரியுள்ளது.
மேலும் ஜனநாயகத்தை மதிக்கும் அனைத்து தரப்பினரும் இதற்கெதிராக குரல் கொடுக்க வேண்டும் என்றும் அது அழைப்பு விடுத்துள்ளது.

Previous articleஆர்ப்பாட்டத்துக்கு முஸ்லிம்களும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் – ரிஷாட் பதியுதீன்
Next articleபொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கான புதிய உறுப்பினர்கள் தெரிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here