ஏப்ரல் 21 தாக்குதல்கள் குறித்த சந்தேக நபரான மாத்தளை சஹ்ரானுடன் அரச உளவு சேவை அதிகாரியின் தொடர்பு!

உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதலின் பின்னர் அதற்கான பொறுப்பை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு ஏற்பதற்கான நடவடிக்கைகளை ‘ மாத்தளை சஹ்ரான்’ எனும்  சந்தேக நபரே முன்னெடுத்திருந்ததாக விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளது.
சி.ஐ.டி.யின்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் தர்ஷிகா குமாரி , பிரதான பொலிஸ் பரிசோதகர் சேனாரத்ன ஆகியோரின் குழுவினர் முன்னெடுத்த விசாரணைகளில் இது தெரியவந்ததாக சி.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர சாட்சியமளித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் சாட்சியமளிக்கும் போது, அவர் இதனை வெளிப்படுத்தினார். இவ்விசாரணைகளில் மாத்தளை சஹ்ரான் எனும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவரே ஐ.எஸ்.ஐ.எஸ். ஐ தாக்குதலின் பின்னர் தொடர்புகொண்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்தது. தாக்குதல் பொறுப்பை ஏற்க அப்பயங்கரவாத அமைப்புக்கு கோரிக்கையானது அவர் ஊடாக சென்றுள்ளது.
அந்த சந்தேக நபர் தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் தர்ஷிகா குமாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் சேனாரத்ன ஆகியோர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது, ‘ சொனிக் சொனிக் ‘ எனும் புனைப் பெயரில் செயற்படும் தேசிய உளவுச் சேவை அதிகாரி ஒருவர் குறித்து தகவல் வெளிப்பட்டது. குறித்த அதிகாரி மாத்தளை சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். இந் நிலையில் அவரிடம் வாக்கு மூலம் பெற  சி.ஐ.டி. அதிகாரிகள் சென்ற போது,  அதற்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். இந் நிலையில் குறித்த அதிகாரியிடம் விசாரித்து வாக்கு மூலம் பெற நான் தலையீடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.’ என  ஷானி அபேசேகர சாட்சியமளித்துள்ளார்.
Previous articleகுருந்தூர் மலையை தரிசிக்க சென்ற பக்தர்களுக்கு கெடுபிடி!
Next articleமனித உரிமை மீறல்கள் தொடர்ந்து இடம்பெறும் அபாயகரமான பாதையில் இலங்கை- ஜ.நா அறிக்கை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here