இலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பாக பிரிட்டன் தூதுவர் ருவிட்டர் செய்தி

ஜ.நா நிபுணர்களிடமிருந்து மிகத் தெளிவான ஒரு செய்தி இலங்கைக்கு சொல்லப்பட்டிருப்பதாக இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டன் ருவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் குறிப்பிடுகையில், சர்வதேச சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து, தங்களது மத நம்பிக்கைகளுக்கு அமைவாக தங்களது அன்புக்குரியவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இறக்கின்ற  நபர்களின் உடல்களை கட்டாய தகனம் செய்வதினை உடனடியாக நிறுத்துமாறு  ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி அறிக்கையொன்றையும் அனுப்பி வைத்திருந்தது.
இதற்கான இலங்கையின் பொறுப்பு கூறல் சார்ந்த பதில் அறிக்கை இன்று ஜெனிவா மனித உரிமை பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here