இலங்கையில் மனித உரிமை நிலை மோசமடைந்துள்ளது: மனித உரிமை கண்காணிப்பகம்

(அப்துல் ரகுமான்)
இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மனித உரிமை நிலைமைகள் மிகவும் மோசமடைந்திருப்பதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் 2021ற்கான தனது  உலக அறிக்கையிலே சுட்டிக்காட்டியுள்ளது.
2019 நவம்பரில்  கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையில் அடிப்படை மனித உரிமைகளின் பாதுகாப்பு கடுமையான ஆபத்தை எதிர்நோக்கியிருப்பதாக அந்த அறிக்கையிலே கூறப்பட்டுள்ளது.
மேலும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் மீது படைத்தரப்பினரின் கண்காணிப்புகள் அதிகரித்திருப்பதாகவும், சிறுபான்மையினரான தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள்  அச்சுறுத்தல்களையும் பாகுபாட்டையும் எதிர்நோக்குவதாகவும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
2015 ஜக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உண்மையைக் கண்டறிதல், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்கான அனுசரணையில் இருந்த  இலங்கை கடந்த 2020 பெப்ரவரியில் குறித்த  அனுசரணைகளிலிருந்து  இலங்கை அரசாங்கம் வாபஸ் பெற்றுக் கொண்டது.
இதன் காரணமாக முன்னைய அரசாங்கம் மேற்கொண்டிருந்த மனித உரிமை நலவுகளை தற்போதைய அரசாங்கம் இலகுவாக மாற்றியமைத்ததாகவும்,  சிறுபான்மை சமூகங்கள் பாதுகாப்பற்ற நிலையை எதிர் நோக்கியிருப்பதாகவும், மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், கடந்த காலங்களில் மனித உரிமைகள் விடயத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அச்சுறுத்தலாகவும், எச்சரிக்கையாகவும் இது மாறியுள்ளது என்றும் தெரிவித்தார்.
100 க்கு மேற்பட்ட நாடுகளின் தரவுகளை உள்ளடக்கிய சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின்  குறித்த அறிக்கையிலேயே  இந்த விடயங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
Previous articleஅரசாங்கத்தின் திட்டமிட்ட செயலே; நினைவுத்தூபி இடிக்கப்பட்டமை.
Next articleஅரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கக் கோரி சர்வ மதத் தலைவர்கள் ஜனாதிபதிக்கு மகஜர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here