ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுடன்  சட்டத்தரணிகள் ஆலோசிக்க அனுமதி

சுமார் 08 மாதங்களாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் சிரேஸ்ட சட்டத்தரணியான ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுடன் , சட்டத்தரணிகள் தனிப்பட்ட முறையில்  ஆலோசனை பெற்றுக்கொள்வதற்கான அனுமதி மேன் முறையீட்டு நீதிமன்றில்  இன்று (15) வழங்கப்பட்டது.
இன்று இந்த வழக்கானது மேன் முறையீட்டு நீதிமன்றில் பரிசீலிக்கப்பட்ட போது சட்டத்தரணிகள் ஹிஜாஸுடன் கலந்துரையாட அனுமதியளிப்பதாக சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால்  நீதிமன்றிற்கு அறிவித்தார்.
மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான பிரியந்த பெர்னாண்டோ மற்றும் சோபித ராஜகரணா  ஆகியோர் முன்னிலையிலேயே இவ் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 2020 ஏப்ரல் 14 ஆந் திகதி சி.ஐ.டி. யினரால் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்  இன்று வரை தடுப்பக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரைக் கைது செய்யும் சந்தர்ப்பத்தில் எதுவித காரணமும் தெரிவிக்கப்படவில்லை என்று அவரது சட்டத்தரணிகள் விசாரணயின் போது தெரிவித்திருந்தனர்.
சட்ட உதவியை முறையாகப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு அவருக்கு வழங்கப்படவில்லை என்றும் அவ்வாறு அனுமதி வழங்கப்பட்ட சந்தர்ப்பங்களில் சி.ஐ.டி ஒருவரின் மேற்பார்வையுடன் அதிக கட்டுப்பாடுகளுடனே உரையாட அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்திருந்தனர்.
இவரது கைது தொடர்பாக இலங்கை சட்டத்தரனிகள் சங்கம், உள்ளூர் அமைப்புகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் உட்பட பல கட்சிகளும் அறிக்கைகள் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous articleபிள்ளையானுக்கு எதிராக விசாரணை கோரும் இலங்கை ஆசிரியர் சங்கம்
Next articleஅவர்கள் எனக்கு பூரண ஒத்துழைப்பு தருகின்றனர் – திஹாரிய பொது சுகாதார பரிசோதகர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here