புதிய சபாநாயகராக மஹிந்த யாபா அபேவர்தன தெரிவு

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ஆளும் கட்சியைச் சேர்ந்த மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாபா அபேவர்தன இன்று தெரிவுசெய்யப்பட்டார்.

இலங்கை வரலாற்றின் 21ஆவது சபாநாயகராகவே மஹிந்த யாபா அபேவர்தன இன்று பதவிப்  பொறுப்பேற்றார்.

புதிய சபாநாயகரை சபை முதல்வர் தினேஷ் குணவர்தன பிரேரித்ததோடு, எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார ஆமோதித்தார்.

மாத்தறை மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு பிரவேசித்த மஹிந்த யாபா அபேவர்தன கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரி என்பதோடு, மாகாண சபை முதலமைச்சராக, பாராளுமன்ற உறுப்பினராக மற்றும் அமைச்சராகவும் செயற்பட்ட 37 வருட அரசியல் அனுபவத்தைக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்தோடு, பிரதி சபாநாயகராக கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவுசெய்யப்பட்டார்.

புதிய சபாநாயகருக்கு பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here