73 வருடங்களில் ஐ.தே.க உறுப்பினர்கள் இல்லாத பாராளுமன்றத்தின் முதல் அமர்வு

1947ஆம் ஆண்டில் இருந்து 73 வருடங்களின் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற பிரதிநிதியொருவர் இன்றி இன்று முதன் முறையாக பாராளுமன்றம் கூடியது.

இலங்கையின் பழம்பெரும் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசிய கட்சி இம்முறை தேர்தலில் வரலாற்றுத் தோல்வியைத் தழுவியது.

2020 பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி ஒரேயொரு பாராளுமன்ற ஆசனத்தை வென்றெடுத்ததோடு, தேசிய பட்டியல் நியமனத்தில் காணப்படுகின்ற இழுபறி நிலை காரணமாக நேற்றைய பாராளுமன்ற அமர்வு அக்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி எவரும் பங்கேற்கவில்லை.

இதனால், 73 வருடங்கள் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய, பல தடவைகளும் ஆளும் கட்சியாக செயற்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிநிதிகள் இன்றி 9ஆவது பாராளுமன்ற அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

ஐக்கிய தேசிய கட்சி வென்றுள்ள ஒரு தேசிய பட்டியலுக்கான நியமனத்திலும் இழுபறி நிலை காணப்படுவதோடு, தலைவர் பதவியிலும் கட்சியினுள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்றைய அங்குரார்ப்பண நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் அபே ஜன பலவேகய கட்சி ஆகியனவற்றின் உறுப்பினர்கள் தலா ஒருவர் இன்றி 223 உறுப்பினர்களுடன் 9வது பாராளுமன்றம் ஆரம்பமானது.

Previous articleசட்டத்தரணி ஹிஜாஸ் குறித்த அனைத்து வாக்குமூலங்களினதும் சுருக்கத்தை நீதிமன்றத்துக்கு முன்வைக்குமாறு சீ.ஐ.டிக்கு உத்தரவு
Next articleபுதிய சபாநாயகராக மஹிந்த யாபா அபேவர்தன தெரிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here