தேர்தல் சட்டங்களின் குறைப்பாடுகளை அடையாளம் காண பாராளுமன்ற தெரிவுக் குழு

தேர்தல்கள் மற்றும் வாக்களிப்பு வியூகங்கள் குறித்த சட்ட திட்டங்களில் உள்ள குறைப்பாடுகளை அடையாளம் காண, விஷேட தெரிவுக் குழுவொன்றினை நியமிப்பதற்காக,   பாராளுமன்றத்துக்கு பிரேரணை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது.

தேர்தல் மற்றும் வாக்களிப்பு வியூகங்கள் தொடர்பிலான தற்போதைய சட்ட திட்டங்களில் உள்ள குறைப்பாடுகளை அடையாளம் காண விஷேட தெரிவுக் குழுவொன்றினை அமைப்பது தொடர்பில் பிரதமரும் நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவின்  பிரேரணையே இவ்வாறு முன்வைக்கப்படவுள்ளதாக  பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.

அந்த பிரேரணை, குறித்த தினம் சபை ஒத்திவைப்பு வேளையின் போது,  சபை முதல்வரும் வெளிவிவகார அமைச்சருமான் தினேஷ் குணவர்தன ஊடாக  பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம்  தம்மிக தஸநாயக்க கூறினார்.

குறித்த பாராளுமன்ற தெரிவுக் குழு, 15 உறுப்பினர்களைக் கொண்டதாக அமையும் எனவும், சபாநாயகர் தெரிவுக் குழு உறுப்பினர்களை நியமித்த பின்னர் 6 மாதங்களுக்குள் தமது  பரிந்துரைகளை   அக்குழு முன்வைக்க வேண்டும்  எனவும் குறித்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க மேலும் கூறினார்.

தற்போதைய தேர்தல் மற்றும் வாக்களிப்பு சட்ட திட்டங்களில் உள்ள குறைப்பாடுகளை அடையாளம் காணுதல் மற்றும் அதனை நிவர்த்தி செய்வதற்கான பரிந்துரைகளை முன்வைத்தல் ஆகியன இந்த தெரிவுக் குழுவின் கடமைகளாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here