கண்காணிக்கப்படும் கனேடிய உயரிஸ்தானிகர்?

‘நான் கண்காணிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றேனா?’ என  இலங்கைக்கான கனடாவின் உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் இட்டுள்ள ட்விட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது  வீட்டுக்கு முன்பாக ஊடகங்கள் இல்லாத சந்தர்ப்பத்தில் தனது  தனிப்பட்ட சந்திப்புகள் தொடர்பில்  ஊடகங்களில் தகவல்கள் வௌியாகின்றமையை சுட்டிக்காட்டியுள்ள இலங்கைக்கான கனடாவின் உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் தான் கண்காணிப்பின் கீழ் உள்ளேனா என்ற சந்தேகம் எழுவதாக கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், இலங்கைக்கான கனடாவின் உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் கண்காணிப்பின் கீழ் உள்ளதாக  கூறப்படும் விடயத்தை இலங்கையின் பொலிஸ் திணைக்களம் மறுத்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள நிலையில், இலங்கையில் எந்தவொரு இராஜதந்திரியும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவதில்லை என தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான கனடாவின் உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் எழுப்பும் சந்தேகத்தின் பிரகாரம், கனேடிய இல்லத்தில் கனடா  உயர்ஸ்தானிகரை பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் சந்தித்தமை , இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் மற்றும் தென் கொரிய தூதுவர் ஆகியோருடனான சந்திப்புக்கள் தொடர்பிலான  தகவல்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தன. இவை ஊடகங்களுக்கு அறிவிக்கப்படாத தனிப்பட்ட சந்திப்புக்கள் என கூறப்படுகிறது.
இதில் விஷேடமாக பங்களாதேஷ் மற்றும் தென் கொரியா ஆகிய இரண்டு நாடுகளும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை நிகழ்வுகளை மையப்படுத்தி, கனேடிய உயர்ஸ்தானிகர் கண்கானணிக்கப்படுகிறரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Previous articleவிடை காணும் கெத்ஹேன நீர் சுத்திகரிப்புத் திட்டம்
Next articleஆணைக் குழு அறிக்கையில்  குற்றவியல் பொறுப்பு சாட்டப்பட்டுள்ளவர்களுக்காக  ஆஜராவது தொடர்பில் தீர்மானிக்க சட்ட மா அதிபருக்கு அவகாசம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here