அவுஸ்திரேலிய பேராசிரியர் கலாநிதி லுக்மான் தாலிபின் ஊடக அறிக்கை

அவுஸ்திரேலிய பேராசிரியர் கலாநிதி லுக்மான் தாலிபும் அவரது சட்டக் குழுவினரும் இலங்கையைச் சேர்ந்த சில ஊடக நிறுவனங்கள் வெளியிட்ட தவறான தகவல்களையும் அவதூறுகளையும் சவாலுக்குட்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
இலங்கையின் சில ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் அடிப்படையற்ற, அவதூறான, பாதகம் நிறைந்த சில குற்றச்சாட்டுக்களை அண்மையில் வெளியிட்டிருந்தன. பேராசிரியர். கலாநிதி லுக்மான் தாலிபையும் ஒரு அவரது புதல்வோன அஹ்மத் தாலிபையும் பயங்கரவாத குற்றங்கள்  போன்ற பாரதூரமான குற்றச்சாட்டுகள் கொண்ட சிலருடன் –சட்டத்துக்குப் புறம்பான வகையில் தொடர்பு படுத்திக் காட்டுவதே இத்தவறான பிரசாரத்தின் நோக்கமாகும்.
பேராசிரியர் லுக்மான் தாலிபுக்கும் அவரது புதல்வருக்கும் எவ்வித வன்முறை அல்லது பயங்கரவாத குழுக்களுடனோ அல்லது நடைபெற்ற பயங்கரவாத சதிகளுடனோ எவ்வித சம்பந்தமும் இல்லை. இந்த வகையில், பேராசிரியர் லுக்மான் தாலிபின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதுடன் அவரது நற்பெயரும் கெளரவமும் களங்கப்படுத்தப்பட்டுள்ளன. மட்டுமன்றி, அவர் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கும் ஆளாகியிருக்கிறார்.
பேராசிரியர் லுக்மான் தாலிப் ஒரு விஞ்ஞானி. மனித உயிர்களை பாதுகாப்பதற்கான வழிகளைக் கண்டறியும் முயற்சியில் பல வெற்றிகரமான சாதனைகளை நிகழ்த்தியவர்.
1986 ஆம் ஆண்டு முதல் அவர் இலங்கைக்கு வெளியிலேயே வசித்து வருகிறார். தனது முதுமானிப் படிப்பையும், கலாநிதி பட்டப் படிப்பையும் இங்கிலாந்தில் பூர்த்தி செய்த அவர், கல்வி வாழ்வில் சிறப்பாகப் பிரகாசித்தார். விஞ்ஞான ஆய்வுகளில் ஈடுபாடு கொண்டு அவுஸ்திரேலியா, ஜப்பான், சஊதி அரேபியா, குவைத், அமெரிக்கா, ஸ்வீடன் முதலிய நாடுகளில் தனது கல்விப் பணியைத் தொடர்ந்தார்
.ஸ்வீடனில் நோபல் பரிசு வென்ற நிறுவனமாென்றில் ‘மார்பகப் புற்றுநோய்’ துறையில் வருகை தரு ஆய்வாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார். அவரது அறிவியல் ஆக்கங்கள் ‘லான்செற்’ (LANCET) போன்ற உலகப் பிரசித்தி பெற்ற மருத்துவ சஞ்சிகைகளில் கூட பிரசுரிக்கப்பட்டுள்ளன.
சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட மருத்துவம், பொது சுகாதாரம், மருத்துவக் கல்வி முதலிய துறைகளில் குவைத்திலும் கட்டாரிலும் பல வருடங்கள் விஞ்ஞானியாக பணியாற்றிய அவர், இறுதியாக கொவிட்-19 தொற்றுக் காலப் பிரிவில் தேசிய அறிவியல் மன்ற (National Scientific Board) உறுப்பினராகவும் பணியாற்றினார். 
உயிரியல் புள்ளிவிபரத் துறைப் பேராசிரியரான கலாநிதி தாலிப், வளைகுடா நாடுகளிலும் உலகத் தரம் வாய்ந்த பல பல்கலைக்கழகங்களிலும் நன்கு அறியப்பட்டவர்.
இத்துறைகளில் அவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார். பேராசிரியர் தாலிப் கடந்த இருபது வருடங்களாக தனது வாழ்வின் பெரும் பகுதியை இலங்கைக்கு வெளியிலேயே கழித்துள்ளார். தனது தாயாரைப் ோர்க்க வரும் வகையில் மாத்திரமே அவரது இலங்கைத் தொடர்புகள் அமைந்திருந்தன. அத்தகைய மிகக் குறுகிய கால வருகைகள் கூட அவரது தாயாரின் மரணத்துடன் நின்று விட்டன.
அவுஸ்திரேலிய பிரஜையான பேராசிரியரிடம்  வேறு நாட்டு பிரஜா உரிமை எதுவும் கிடையாது. பேராசிரியர் தாலிப் தனது வாழ்வை மனித உயிர்களையும் மனித ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதிலேயே செலவிட்டவர். மதம், இனம், நம்பிக்கை முதலிய வேறுபாடுகளுக்கப்பால்  உலகம் முழுவதிலும் வாழும் அனைத்து மனிதர்களையும் பாதுகாப்பதற்கான அறிவியல் பணியில் அவர் தன்னை அர்ப்பணித்தவர். இவ்வளவு பணிகளை ஆற்றிய பேராசிரியர் தற்போது இரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர் குறித்தும் அவரது புதல்வர் குறித்தும் வெளியிடப்பட்டுள்ள தவறான செய்திகள் அவரை மிகுந்த மனத்துன்பத்துக்கு ஆளாக்கியிருப்பதுடன், அவரது உடல் நிலையைப் பாதித்து உயிராபத்துக்கும் வழிவகுத்துள்ளன
இடம்பெற்ற கொடூர பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டிருக்கும் பேராசிரியர் தாலிப், கொல்லப்பட்டவர்களது உறவினர்களுக்கும் இலங்கை மக்களுக்கும் உண்மை நிலையை கண்டறிந்து வெளிப்படுத்துவது இலங்கை அரசாங்கத்தினதும் நீதித் துறையினதும் பொறுப்பாகும் என நம்புகிறார்.
பேராசிரியர் லுக்மான தாலிப் தனக்கும் தனது குடும்பத்துக்கும் எதிராக இடம்பெற்றுள்ள பல்வேறு மீறல்களை சவாலுக்குட்படுத்துவதற்கான அனைத்து சட்ட நடவடிக்ககககளையும் தனது தேர்ச்சி பெற்ற சட்டக் குழுவினரின் உதவியுடன் ஆரம்பித்திருக்கிறார்.
நிரபராதிகளான பேராசிரியர் லுக்மான் தாலிபும் அவேது குடும்பத்தினரும்தாம் செய்யாத குற்றங்களுக்கு பலிக்கடாவாக ஆக்கப்பட்டிருப்பதாக நம்புகின்றனர்.

 

Previous articleமொஹான் பீரிஸ், நவாஸ் உள்ளிட்டோருக்கு எதிரான குற்றப் பத்திரிகையை வாபஸ் பெறுவதற்கு தீர்மானம்
Next articleஅசாத் சாலி ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புபட்டிருக்கலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here