ஹிஜாஸ்  போன்றோரை துன்புறுத்தக்கூடாது ; பாதுகாக்க வேண்டும்: 8  மனித உரிமை தூதுவர்கள் கோரிக்கை

மனித உரிமைகளுக்காக முன்னிற்கும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் போன்றோரை துன்புறுத்தக்கூடாது எனவும், அவர்களை பாதுகாக்க வேண்டும் எனவும்  கூட்டறிக்கை ஒன்றூடாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சார்பாக 8 நாடுகளின் மனித உரிமைகள் தூதுவர்கள், இந்த பொதுவான கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

நெதர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, சுவீடன், எஸ்டோனியா, லித்துவேனியா, பின்லாந்து மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகளின் மனித உரிமைகள் தூதுவர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

திறமை வாய்ந்த சட்டத்தரணியான ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கடந்த 2020 ஏப்ரல் மாதம் முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தாம் மிகவும் கவலையடைவதாக மனித உரிமைகளுக்கான தூதுவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மனித உரிமைகளுக்காக போராடுபவர்களை, பாதுகாப்பதும் ஊக்குவிப்பதும் எந்தவொரு நாட்டினதும் அவசியம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அவ்வாறானோரை பாதுகாப்பது அனைத்து அரசாங்கங்ளின் பொறுப்பாகும் எனவும் அவர்களை துன்புறுத்தலாகாது எனவும் 8 நாடுகளின் மனித உரிமைகளின் தூதுவர்கள் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Previous articleமியான்மாரின் இராணுவ ஆட்சியை இலங்கை அரசு உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கின்றதா?
Next articleஅரபு நாடுகளின் நண்பனாகக் கூறும் இந்த அரசு, புர்காவை தடைசெய்து இனவாதிகளுக்கு இனிப்பூட்டுகிறது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here