வியாபாரப் பொருட்களின் பொதிகளில் விபரங்கள் மும்மொழிகளிலும் அச்சிடப்படுவது கட்டாயம்

76 வியாபாரப் பொருட்களின் பொதிகளில் விபரங்கள் தெளிவாகத் தெரியும் விதத்தில் மும்மொழிகளிலும் அச்சிடப்பட வேண்டுமென பணிப்புரை விடுத்து விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

வியாபாரப் பொருட்களின் பொதிகள், கொள்களன்கள் அல்லது உறைகள் மீது பொறிக்கப்படும் ஆகக்கூடிய சில்லறை விலை, தொகுதி இலக்கம், காலாவதியாகும் திகதி, உற்பத்தித் திகதி, நிகர நிறை, உற்பத்தி செய்யப்பட்ட நாடு, மீள் பொதியிடப்பட்ட திகதி போன்றன மும்மொழிகளிலும் அச்சிடப்பட வேண்டுமென்பதே மேற்படி வர்த்தமானி அறிவித்தலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்விடயம் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பொருட்கள் தொடர்பாக விடயங்கள் மும்மொழிகளிலும் இல்லாமையால் பொது மக்கள் பல சிரமங்களுக்கு உள்ளாகின்றதைக் கருத்தில் கொண்டே பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைச் சட்டத்தின் கீழ் இந்த விடயம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதற்கேற்ப, மும்மொழிகளிலும் தகவல்கள் குறிப்பிடப்பட வேண்டிய பொருட்களின் அட்டவணையைக் கீழே காணலாம்.

 

Next articleசட்டத்தரணி ஹிஜாஸ் குறித்த அனைத்து வாக்குமூலங்களினதும் சுருக்கத்தை நீதிமன்றத்துக்கு முன்வைக்குமாறு சீ.ஐ.டிக்கு உத்தரவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here