‘20க்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடுவதில்லை’- விஜித ஹேரத்

20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக உயர்நீதிமன்றம் செல்லும் எதிர்பார்ப்பொன்று இல்லையென தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் medialk.com க்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்ள மக்கள் கருத்துக்கோரலொன்று அவசியமில்லை என்றும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பலத்தால் நிறைவேற்றிக்கொள்ள முடியுமென்றும் சட்டமா அதிபர் தெரிவித்துள்ள நிலையில் உயர்நீதிமன்றம் செல்லும் நோக்கமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,

‘சில தரப்பினர் உயர்நீதிமன்றம் சென்று 20ஆவது திருத்தம் அரசியலமைப்புக்கு முரணானதா என்ற விடயத்தைத் தீர்த்துக்கொள்வார்கள். 20ஆவது திருத்தம் ஜனநாயகத்துக்கான மரண அடியாகும். ஜனநாயகத்தின் தோல்வியாகும். ஜே.ஆரின் அரசியலமைப்பை மீண்டும் அதேபோல் செயற்படுத்துவதற்கான முயற்சியாகும். இது சர்வாதிகாரப் போக்குக்கான ஆரம்பமாகும்.’

 

Previous articleஅரசியலமைப்பின் 20ஆம் திருத்தம் மூலம் ஏற்படவுள்ள முக்கிய மாற்றங்கள்
Next article‘தெற்கின் பெரும்பான்மை இனத்தவர்கள் மாகாண சபை முறைமை வேண்டாம் என்பதற்காக வட- கிழக்கு மாகாண சபைகள் ஒழிக்கப்படக் கூடாது’- ஹஸன் அலி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here