“யாழ். கலாசார மண்டபத்தை நாங்களே நிர்வகிப்போம்”

யாழ்.மாநகர சபைக்குச்  சொந்தமான இடத்தில் இந்திய அரசினால் அமைக்கப்பட்டிருக்கும் கலாசார மண்டபத்தை நாங்களே நிர்வகிப்போம் என்பதாக மாநகர முதல்வர் MediaLK ற்கு இன்று தெரிவித்தார்.
யாழ். கலாசார மண்டபத்தை கொழும்பு தாமரைத் தடாகத்தை நிர்வகிக்கும் படையினரிடம் கையளிக்குமாறு  பரிந்துரை செய்யப்பட்டமை தொடர்பாக வினவிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த 26 ஆம் திகதி ஜனவரி மாதம் தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக் கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் எஸ்.ரி.கொடிகாரவினால் புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாச்சார அமைச்சின் செயலாளருக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
குறித்த கடிதத்தில், யாழ். கலாசார மண்டபத்தை நிர்வகிப்பதற்கான புதிய ஆளணியை நியமித்து அவர்களிற்கு பயிற்சி அளிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும், இதனால் அதனை ஒழுங்குபடுத்துவதற்கு காலதாமதம் ஏற்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு தீர்வாக யாழ். கலாசார மண்டபத்தின்  நிர்வாகத்தை மாநகர சபை பொறுப்பேற்கும் வரையில் கொழும்பு தாமரைத் தடாகத்தை நிர்வகிக்கும் படையினரிடம் அதனை கையளிக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
எனவே இது ஒரு பரிந்துரை என்றும் தீர்க்கமான முடிவல்ல என்றும் மாநகர முதல்வர் எமக்கு தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு வட மாகாண ஆளுனரை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அவரிடமிருந்து எமக்கு பதில் எதுவும் கிடைக்கவில்லை
குறித்த கடிதத்தின் பிரதி பிரதமரின் செயலாளர், வடக்கு மாகாண ஆளுநர், மாநகர முதல்வர், மாவட்டச் செயலாளர் மற்றும்  மாநகர ஆணையாளர் ஆகியோருக்கும் பிரதியிடப்பட்டுள்ளதாகவும் அதிலே தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous articleவடகிழக்கில் மட்டும் பாதுகாப்பு முகாம்கள் அதிகரிக்கப்படுவது எதனால் – சபையில் சாணக்யன் கேள்வி
Next articleசீனாவின் திட்டத்திற்காக மூன்று இலங்கை தீவுகள் – இந்தியாவும் 12 மில்லியனை வழங்க முயற்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here