புதிய அரசியலமைப்பின் திருத்த வரைபைத் தயாரிப்பதற்கான நிபுணர் குழு நியமனம்

நாட்டுக்கான புதிய அரசியலமைப்பின் திருத்த வரைபைத் தயாரிப்பதற்காக ஒன்பது உறுப்பினர்கள் கொண்ட நிபுணத்துவ குழுவை அமைச்சரவை நியமித்துள்ளது.

உத்தேச அரசியலமைப்பு வரைபுக் குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டீ சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய அரசியல் யாப்பொன்றுக்கான அடிப்படைத் திருத்த சட்ட மூலத்தைத் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் ஏனைய உறுப்பினர்களாக பின்வருவோர் உள்ளடங்குகின்றனர்.

ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன
ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டீ சில்வா
ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன
பேராசிரியர் நசீமா ஹமூர்தீன்
கலாநிதி எ. சர்வேஸ்வரன்
ஜனாதிபதி சட்டத்தரணி சமன்த ரத்வத்தே
பேராசிரியர் வசன்த செனவிரத்ன
பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்

மேற்படி குழு 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் புதிய அரசியல் யாப்பொன்றுக்கான திருத்த வரைபையும் தயாரித்து சமர்ப்பிக்கவுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here