இன்று பதிவான கொரோனா தொற்றுக்குள்ளானோர் தொகை 135

Staff Writer | Author . Translate to English or සිංහල 5/26/2020 10:21:00 PM
இன்று பதிவான கொரோனா தொற்றுக்குள்ளானோர் தொகை 135

Update : 10.20 PM  

இன்று (26) கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளானோர் தொகை 135 வரை அதிகரித்துள்ளதோடு, இலங்கையில் நாளொன்றில் பதிவான அதிகூடிய தொகையும் இதுவாகும்.

குவைட்டில் இருந்து வந்து மின்னேரியா மற்றும் திருகோணமலை தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு இருந்த 135 பேரே இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கேற்ப, இலங்கையில் இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ள கொரோனா தொற்றுக்குள்ளானோர் தொகை 1317ஆக அதிகரித்துள்ளது.

 Update : 8.00 PM  

இலங்கையில் ஒரே தினத்தில் அதிகமான கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் இன்றே (26) பதிவாகியுள்ளனர். இன்று கொரோனா தொற்றுக்குள்ளான 96 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 88 பேர் குவைட்டிலிருந்து வந்தவர்கள் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குவைட்டில் இருந்து வந்து மின்னேரியா மற்றும் திருகோணமலை தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு இருந்த 88 பேரே இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஏனைய 8 பேரும் கடற்படை வீரர்களாவர்.

இதற்கு முன்னர் ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி கொரோனா தொற்றுக்கு உள்ளான 65 பேர் அடையாளம் காணப்பட்டதே இலங்கையில் ஒரே தினத்தில் பதிவான அதிகூடிய தொகையாக காணப்பட்டது.

Update : 6.40 PM

இன்று (26) கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளான 24 பேர் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அதில் 19 பேர் குவைட்டில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏனைய 5 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த கடற்படை வீரர்கள் என்று அரச தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கேற்ப, இதுவரையில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தொகை 1206 என்பதோடு, 712 பேர் பூரண சுகமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 485 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 633 கடற்படை வீரர்களும் உள்ளடங்குகின்றனர்.

Share