இறுதி வருட மாணவர்களுக்காக மருத்துவ பீடங்களை ஜூன் 15ஆம் திகதி ஆரம்பிக்கத் தீர்மானம்

Staff Writer | Author . Translate to English or සිංහල 5/26/2020 4:40:00 PM
இறுதி வருட மாணவர்களுக்காக மருத்துவ பீடங்களை ஜூன் 15ஆம் திகதி ஆரம்பிக்கத் தீர்மானம்

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மருத்துவ பீட இறுதி ஆண்டு மாணவர்களின் பரீட்சை நடவடிக்கைகளுக்காக மாத்திரம் பல்கலைக்கழகங்களை ஜூன் மாதம் 15ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக  நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டுவருவது தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிப்பதற்காக உயர்கல்வி  அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன தலைமையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற  ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சுகாதார பணிப்பாளர் நாயகம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவினருக்கு இடையே நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, அதிக சுகாதார கட்டுப்பாடுகளுடன் இந்த தீர்மானத்தை மேற்கொள்ள அனுமதி கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மருத்துவ பீட மாணவர்களுக்கு மாத்திரம் விடுதி வசதிகள் வழங்கப்படவுள்ளதாகவும் ஒரு மாணவனுக்கு ஒரு அரை வழங்கப்படவுள்ளதாகவும் பேராசிரியர் சம்பத் மேலும் தெரிவித்தார். 

Share