6 மாவட்டங்களுக்கான வானிலை எதிர்வுகூறல்

Staff Writer | Author . Translate to English or සිංහල 5/19/2020 3:16:00 PM
6 மாவட்டங்களுக்கான வானிலை எதிர்வுகூறல்

அடுத்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல மாவட்டங்களிலும் 200 மில்லி மீட்டருக்கும் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு 200 மில்லி மீட்டருக்கும் அதிகளவான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களுக்கும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

காலி, கேகாலை, குருநாகல், நுவரெலியா மற்றும் இரத்தினபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக களு கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் இரத்தினபுரி, குருவிட, அயகம, நிரியெல்லா மற்றும் எலபான பகுதிகளில் ஆற்றுக்கு அருகில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரித்துள்ளது.

இதேவேளை எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் 150 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் ஏற்பட்ட தாழமுக்கம் அம்பான் சூறாவளியாக உருமாறியுள்ளமையினால் இந்த அனர்த்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

தாழமுக்கம் தீவிரமடைந்த நிலையில், வடக்கு மற்றும் வடமேற்கு கடற்பரப்பு வழியாக நகர்ந்து செல்லும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Aadhil Ali Sabry

Share