17ஆம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு

Staff Writer | Author . Translate to English or සිංහල 5/14/2020 5:22:00 PM
17ஆம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏனைய மாவட்டங்களுக்கு எதிர்வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை வரை இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரையான ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.

மே மாதம் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு மே மாதம் 18ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு உத்தரவு பின்னர் மே மாதம் 23ம் திகதி சனிக்கிழமை வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Aadhil Ali Sabry

Share