பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான மனுக்களை ஆராய ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழாம்

Staff Writer | Author . Translate to English or සිංහල 5/14/2020 5:13:00 PM
பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான மனுக்களை ஆராய ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழாம்

ஜூன் மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை ஆராய்வதற்காக உயர்நீதிமன்றம் ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் ஒன்றை நியமித்துள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய குறித்த நீதிபதி குழுவின் தலைவராக செயற்படவுள்ளார்.

மேற்படி நீதிபதிகள் குழாத்தில் நீதவான்களான புவனெக அலுவிஹார, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அடிப்படை உரிமை மனுக்கள் இந்த மாதம் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளது. 

Aadhil Ali Sabry

Share