தேர்தல் சர்ச்சைக்கு மத்தியில் நாளை கூடுகின்ற அரசியலமைப்பு சபை

Staff Writer | Author . Translate to English or සිංහල 5/10/2020 10:54:00 PM
தேர்தல் சர்ச்சைக்கு மத்தியில் நாளை கூடுகின்ற அரசியலமைப்பு சபை

பொதுத் தேர்தலை நடத்துவது மற்றும் தேர்தல் ஆணையாளரின் நடவடிக்கைகள் தொடர்பாக நாட்டில் பரந்த விவாதமொன்று மேலெழுந்துள்ள நிலைமையில், நாளை (11) அரசியலமைப்பு சபையின் கூட்டமொன்றும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் மேற்படி கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், அது தொடர்பாக கடந்த வாரம் புதன் கிழமையே உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நாம் வினவியபோது, இது அவசர கூட்டமொன்றல்ல என்று அரசியலமைப்பு சபையின் உறுப்பினர் சட்டத்தரணி ஜாவிட் யூசுப் தெரிவித்தார்.

அதேபோன்று, சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் தொடர்பில் குறுக்கிடுவதற்கு அரசியலமைப்பு சபைக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் தற்போதைய நிலைமை குறித்து சபையின் உறுப்பினர்களுடன் சில விடயங்கள் கலந்துரையாடப் படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Aadhil Ali Sabry

Share