தபால் சேவை ஊழியர்களின் ஊதியம் பலவந்தமாக துண்டிப்பு

Staff Writer | Author . Translate to English or සිංහල 5/10/2020 10:46:00 PM
தபால் சேவை ஊழியர்களின் ஊதியம் பலவந்தமாக துண்டிப்பு

தபால் திணைக்கள ஊழியர்களுக்கு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஏப்ரல் மாதத்திற்கான ஊதியத்தில் ஒரு நாளைக்கான ஊதியத்தை கொவிட் 19 நிதியத்திற்கு பெறப்பட்டுள்ளது.

அரச சுற்று நிருபம் எதுவும் வெளியிடப்படாத நிலையில், இவ்வாறு பலவந்தமாக ஊதிய துண்டிப்பு மேற்கொள்வது தன்னிச்சையான செயற்பாடாகும் என்பதை இலங்கை தபால் சேவை தொழிற் சங்கம் சுட்டிக் காட்டியுள்ளது.

எனவே, இவ்வாறு துண்டிக்கப்பட்டுள்ள நாள் ஊதியத்தை ஊழியர்களுக்கு மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தபால் சேவை தொழிற் சங்கம் தபால் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Aadhil Ali Sabry

Share