களுத்துறை மற்றும் புத்தள மாவட்டங்களில் ஊரடங்கு தொடர்பாக பொலிஸாரின் தெளிவுபடுத்தல்

Staff Writer | Author . Translate to English or සිංහල 5/10/2020 11:02:00 PM
களுத்துறை மற்றும் புத்தள மாவட்டங்களில் ஊரடங்கு தொடர்பாக பொலிஸாரின் தெளிவுபடுத்தல்

UPDATE 9.30pm

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ஊடக அறிவித்தலைத் தொடர்ந்து பொலிஸ் ஊடகப் பிரிவு திருத்தியமைக்கப்பட்ட புதிய ஊடக அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பிரிவின் புதிய அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

களுத்துறை, புத்தளம் உட்பட ஏனைய மாவட்டங்களில் 2020.05.11 ஆம் திகதியில் இருந்து இரவு 8.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரையே ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கொழும்புஇ கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கையில் மக்கள் வாழ்க்கை மற்றும் நிறுவன செயற்பாடுகளை இயல்பு நிலைக்கு கொண்டு வருதல் ஏற்கனவே திட்டமிட்டபடி மே மாதம் 11 ஆம் திகதி திங்கட்கிழமையில் இருந்து ஆரம்பமாகும்.

அதேநேரம், ஜனாதிபதி ஊடகப் பிரிவு 2020.05.10 இரவு 7.00 மணிக்கு வெளியிட்ட ஊடக அறிவித்தலில் இருந்த ஏனைய விடயங்கள் அனைத்தும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு மாற்றமின்றி செயற்படுத்தப்படும்.

 

News 9.00pm

இரண்டு ஊடக அறிவித்தல்கள் காரணமாக கொழும்பு மற்றும் புத்தளம் ஊரடங்கு நடைமுறையில் தெளிவின்மை

பொலிஸ் ஊடகப் பிரிவு மற்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு ஆகியன இன்றிரவு வெளியிட்ட ஊடக அறிக்கைகள் இரண்டிலும் புத்தளம் மாவட்டம் மற்றும் களுத்துறை மாவட்டம் ஆகியவற்றில் ஊரடங்கு சட்ட நடைமுறையில் தெளிவில்லாத தன்மையொன்று ஏற்பட்டுள்ளது. 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் நாளை முதல் புத்தளம், களுத்துறை மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவதாகவும் மறு அறிவித்தல் வரும் வரை இரவு 8.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கையில் மக்கள் வாழ்க்கை மற்றும் நிறுவன செயற்பாடுகளை இயல்பு நிலைக்கு கொண்டு வருதல் ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை மே மாதம் 11 ஆம் திகதி திங்கட்கிழமையில் இருந்து ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும், பொலிஸ் ஊடகப் பிரிவு இன்றிரவு வெளியிட்ட ஊடக அறிக்கையில் வடமேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள நிலையில் மக்கள் வாழக்கை இயல்பு நிலைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கேற்ப களுத்துறை மாவட்டம் மற்றும் புத்தளம் மாவட்டம் ஆகியவற்றில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவது தொடர்பில் தெளிவற்ற தன்மையொன்று ஏற்பட்டுள்ளது. 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இரவு 7.55 மணியளவில் ஊடக அறிக்கையை வெளிட்டுள்ளதோடு பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இரவு 7.00 மணியென நேரம் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அவை ஊடகங்களுக்குக் கிடைக்கும் போது 7.30 மணியாகியிருந்தது.

இந்த தெளிவின்மை குறித்து பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்னவிடம் வினவிய போது,


‘பொலிஸ் ஊடக அறிவித்தல் முன்வைக்கப்படும் போது ஊரடங்குச் சட்டம் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த கலந்துரையாடலைத் தொடர்ந்தே ஜனாதிபதி ஊடகப் பிரிவு இரவு 7.55 மணியளவில் ஊடக அறிவித்தலை வெளியிட்டிருந்தது. நாம் திருத்தங்களுடன் புதிய ஊடக அறிவித்தலை உடன் வெளியிட எதிர்பார்க்கின்றோம்.’ என்றார்.  

பொலிஸ் ஊடகப்பிரிவு மற்றும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு ஆகியன வெளியிட்டிருந்த ஊடக அறிவித்தல்கள் பின்வருமாறு.

Aadhil Ali Sabry

Share