சாதாரண பயணங்களுக்காக மேலும் 2 வாரங்களுக்கு பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டாம்

Staff Writer | Author . Translate to English or සිංහල 5/10/2020 11:53:00 AM
சாதாரண பயணங்களுக்காக மேலும் 2 வாரங்களுக்கு பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டாம்

சாதாரண பயணங்களுக்காக மேலும் 2 வாரங்களுக்கு பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் அனில் ஜயசிங்க போக்குவரத்து அமைச்சுக்கு அறிவித்துள்ளார்.

நாளை முதல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ளதால், பொதுப் போக்குவரத்து நடவடிக்கைகளை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக போக்குவரத்து அமைச்சு சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் ஆலோசனை கோரியுள்ளனர்.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் மேலும் இரண்டு வாரங்கள் செல்லும் வரை சாதாரண போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக பொதுப் போக்குவரத்து சேவையைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் பொதுப் போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் போது பொது மக்கள் அநாவசிய தேவைகளுக்காக அவற்றைப் பயன்படுத்தும் அவதானம் இருப்பதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அரச மற்றும் தனியார் துறையினர் தொழில் நடவடிக்கைகளுக்கு செல்வதற்காக பொதுப் போக்குவரத்து சேவையைப் பயன்படுத்தும் போது சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறும், முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி போக்குவரத்தை மேற்கொள்ள வேண்டுமென்றும் போக்குவரத்து அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

Aadhil Ali Sabry

Share