Live 🔴 : கொரோனா நோயாளர் தொகை மேலும் 18ஆல் அதிகரிப்பு

Staff Writer | Author . Translate to English or සිංහල 5/8/2020 6:55:00 AM
Live 🔴 : கொரோனா நோயாளர் தொகை மேலும் 18ஆல் அதிகரிப்பு

 

Update : 6.40 AM

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோர் தொகை 824ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 01 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.

இத்துடன் நேற்று (07) அடையாளம் காணப்பட்ட கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளானோர் தொகை 27 ஆக அதிகரித்துள்ளது. 

Update : 12.20 AM

கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளான மேலும் 18 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

அதற்கேற்ப, இலங்கையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளானோர் தொகை 823ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.

இத்துடன் நேற்று (07) அடையாளம் காணப்பட்ட கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளானோர் தொகை 26 ஆக அதிகரித்துள்ளது. 

Update : 10.50 PM

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோர் தொகை 805ஆக அதிகரித்துள்ளது.

Update : 5.20 PM

இலங்கையில் மேலும் 07 நோயாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொகை 804 வரை அதிகரித்துள்ளதாக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் 232 பேர் பூரண சுகமடைந்துள்ளதுடன் 09 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 563 கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.

Update : 1.00 PM

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த 17 பேர் சுகமடைந்து, வீடுகளுக்குச் சென்றதையடுத்து பூரண சுகமடைந்தவர்களின் தொகை 232ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.

Share