கொவிட் 19 : ஒன்பதாவது மரணம் பதிவானது

Staff Writer | Author . Translate to English or සිංහල 5/5/2020 2:36:00 PM
கொவிட் 19 : ஒன்பதாவது மரணம் பதிவானது

இலங்கையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக மேலும் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதை அடுத்து இதுவரை இலங்கையில் உயிரிழந்தோர் தொகை ஒன்பதாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

உயிரிழந்த பெண் கொழும்பு மோதரை பிரதேசத்தைச் சேர்ந்த ஐம்பத்தி இரண்டு வயதுடைய நபராவார்.

கொரோனா தொற்றுக்குள்ளாகி கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலே இவர் உயிரிழந்துள்தாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


Share