கொரோனா வைரஸ் உதவிக்காக பொருட்களை ஏற்றிச்சென்ற விமானம் சோமாலியாவில் விபத்து – ஆறு பேர் உயிரிழப்பு

Staff Writer | Author . Translate to English or සිංහල 5/5/2020 9:37:00 AM
கொரோனா வைரஸ் உதவிக்காக பொருட்களை ஏற்றிச்சென்ற விமானம் சோமாலியாவில் விபத்து – ஆறு பேர் உயிரிழப்பு

 கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுபவர்களுக்கான உதவிப் பொருட்களை ஏற்றிச்சென்ற விமானம் திங்கட்கிழமையன்று சோமாலியாவில் விபத்துக்குள்ளானது.

விமானத்தில் இருந்த ஆறு பேரும் பலியாகியுள்ளதாக அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கான காரணத்தை உத்தியோகபூர்வமாக தெரிவப்பதற்கு மறுத்ததைத் தொடர்ந்து, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் தான் விமான நிலையத்தில் உள்ள ஒரு சாட்சியாளர் ஒருவருடன் தொடர்பு கொண்டதன் மூலம் குறித்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டமை அறியக்கிடைத்துள்ளதாக ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

மொகாடிசுவில் இருந்து ஒரு ஆபிரிக்க வான்வழி விமானம் பைடோடாவாவுக்கு பறந்து பின்னர் பர்டேல் நகரத்திற்கு தனது பயணத்தைத் தொடர்ந்தமையை அடுத்தே அது விபத்துக்குள்ளாகியுள்ளது.

Share