Live 🔴 :கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொகை 771

Staff Writer | Author . Translate to English or සිංහල 5/5/2020 11:47:00 PM
Live 🔴 :கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொகை 771

Update : 11.30

இலங்கையில் மேலும் 06 நோயாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொகை 771 வரை அதிகரித்துள்ளதாக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.

இன்றைய தினத்தில் உறுதியான மொத்த நோயாளர் தொகை 20 ஆகும். 

Update : 10.30

கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளான மேலும் 03 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

அதற்கேற்ப, இலங்கையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளானோர் தொகை 765ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.

இன்றைய தினத்தில் உறுதியான மொத்த நோயாளர் தொகை 14 ஆகும். 

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் 213 பேர் பூரண சுகமடைந்துள்ளதுடன் 09 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 543 கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.

கொரோனா என்ற சந்தேகத்தின் பேரில் 145 பேர் மருத்துவமனைகளில் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

Update : 8.30 PM

 இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொகை 762ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.

அது மேலும் 02; கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்தேயாகும்.

Update : 7.30 PM

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த 16 பேர் சுகமடைந்து, வீடுகளுக்குச் சென்றதையடுத்து பூரண சுகமடைந்தவர்களின் தொகை 213ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.

Update : 7.00 PM

இலங்கையில் மேலும் 05 நோயாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொகை 760 வரை அதிகரித்துள்ளதாக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.

Update : 8.45 AM

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொகை 755ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.

அது மேலும் 04; கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்தேயாகும்.

 

Share