15 வருடங்களில் ஊடக அடக்குமுறைச் சம்பவங்கள் 130: பயம், பக்கச் சார்பற்ற ஊடகவியலுக்கான சவாலாகும்

15 வருடங்களில் ஊடக அடக்குமுறைச் சம்பவங்கள் 130: பயம், பக்கச் சார்பற்ற ஊடகவியலுக்கான சவாலாகும்

இன்று (மே- 03) சர்வதேச ஊடகச் சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்தக் கட்டுரை அதுகுறித்து எழுதப்பட்டதாகும்.

கொவிட் 19 தீவிர நோய்த் தொற்று காரணமாக உலகின் பலமான நாடுகள் கூட பயந்து நடுங்குகின்ற பின்னணியிலேயே இம்முறை சர்வதேச ஊடக சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

கொவிட் 19 பரவலைக் காரணம் காட்டி எழுத்து, கருத்துச் சுதந்திரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள பின்னணியிலேயே இலங்கையில் சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை அனுஷ்டிக்க வேண்டியேற்பட்டுள்ளது.

‘பயம், பக்கச் சார்பற்ற ஊடகவியல்’ என்பதே இம்முறை சர்வதேச ஊடக சுதந்திர தினத்தின் தலைப்பாகும். பயம், பக்கச் சார்பற்ற ஊடகக் கலாச்சாரமொன்று இன்று இலங்கையில் இருக்கின்றதா? பயம், பக்கச் சார்பற்ற ஊடகக் கலாச்சாரமொன்றை இலங்கையினுள் மேற்கொள்ள முடியுமா?

2005 முதல் 2015 வரையான 15 வருட காலப் பகுதியில் இலங்கையினுள் ஊடகவியலாளர்கள் கொலை, கடத்தல், சித்திரவதை, தாக்குதல் சம்பவங்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல் போன்ற 130 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 126 சம்பவங்கள் 2005 முதல் 2015 வரையில் நடைபெற்றவையாகும். அந்த 126 சம்பவங்களில் 6 சம்பவங்கள் குறித்தே பின்னர் ஆட்சிக்கு வந்த ‘நல்லாட்சி’ அரசாங்கம் பரிசோதனைகளை ஆரம்பித்தது. அவை லசந்த விக்ரமதுங்க கொலை, பிரகீத் எக்னெலிகொட கடத்தல், உபாலி தென்னகோன் தாக்குதல் சம்பவம், கீத் நோயர் தாக்குதல் - சித்திரவதை சம்பவம், நாமல் பெரேரா தாக்குதல் சம்பவம் மற்றும் போத்தல ஜயந்த கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் போன்றனவாகும்.

தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிரான சம்பவங்கள் தொடர்பில் ஒரு பரிசோதனையாவது ஆரம்பிக்கப்படாமை விசேட அம்சமாகும். ஆரம்பிக்கப்பட்ட பரிசோதனைகளில் உபாலி தென்னகோன் தாக்குதல் சம்பவம், பிரகீத் எக்னெலிகொட கடத்தல், கீத் நோயர் தாக்குதல்- சித்திரவதை சம்பவம் மற்றும் நாமல் பெரேரா தாக்குதல் சம்பவம் போன்றவற்றுடன் தொடர்புடைய சந்தேக நபர்களே கைதுசெய்யப்பட்டனர்.

லசந்த விக்ரமதுங்க கொலைச் சம்பவம் தொடர்பாக இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதோடு, கொலை தொடர்பான சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் சிலர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இராணுவத்தினர் அல்லது பொலிஸ் அதிகாரிகள் என்பதே இந்த கைதுகளின் விசேட அம்சமாகும். குறித்த இராணுவ அல்லது பொலிஸ் அதிகாரிகளுக்கு ஊடகவியலாளர்களை தாக்கவோ, கடத்தவோ, சித்திரவதை செய்யவோ, சாட்சியங்களை அழித்து விடவோ அல்லது கொலை செய்துவிடவோ உத்தரவிட்ட எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.

இம்முறை இலங்கையில் சர்வதேச ஊடக சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படுவதும் இதுபோன்ற நிலைமையிலாகும். 2005 முதல் 2015 வரையான காலப் பகுதியிலும், அதற்கு முன்னரான காலப் பகுதிகளிலும் இலங்கையில் ஊடகவியலாளர்கள் கொலை, கடத்தல், சித்திரவதை, தாக்குதல் சம்பவங்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல் போன்றன தொடர்பாக ஆராய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென்று இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம், இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் உட்பட பல ஊடக அமைப்புகளும் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் எழுத்துமூலம் கோரியிருந்தன. எனினும், முன்னாள் ஜனாதிபதி அதுகுறித்து கவனம் செலுத்தவில்லை. தானும் லேக்ஹவுஸ் ஊடகவியலாளராக செயற்பட்டதாக தம்பட்டம் அடித்துக்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஊடகவியலாளர்கள் விடயத்திற்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவை இருக்கவில்லை என்பதோடு, ஊடகவியலாளர்களின் சம்பவங்களோடு தொடர்புடைய இராணுவத்தினர் கைது செய்யப்படும் போது அதுகுறித்து இரகசிய பொலிஸாரையும் குற்றம் சாட்டினார்.

2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சிக்கு வந்துள்ளவர்கள் 2005 முதல் 2015 இடையிலான காலப் பகுதியில் ஆட்சியில் இருந்தவர்களே என்பதால், ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைகள் குறித்த விசாரணைகள் இனியும் பிரச்சினைகள் இன்றி தொடரும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனின், இந்த கொரோனா தொற்று நிலைமையிலும் எழுத்து மற்றும் கருத்துத் தெரிவிக்கும் உரிமைக்கு கட்டுப்பாடு விதிக்க ஆரம்பித்துள்ள காரணத்திலாகும்.

பொலிஸ் ஊடகப் பிரிவு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வெளியிட்ட ஊடக அறிவித்தலில் தெரியவருவதாவது, அதனைத் தாண்டியும் சம்பவங்கள் நடைபெற உள்ளது என்பதாகும். சர்ச்சைக்குரிய அந்த பொலிஸ் ஊடக அறிவிப்பில் இருந்ததாவது, அதிகாரிகளின் சிறு குறைகளை விமர்சிப்போர் கைது செய்யப்படுவர் என்பதாகும். ‘சிறு குறையின்’ அளவை பொலிஸார் எவ்வாறு மதிப்பிடுவர் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு, இதற்கு ஒரு வருடத்திற்கு முன்னர் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சிறந்த உதாரணமாகும். குறித்த நபர்களால், குறித்த இடங்களுக்கு தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்படவுள்ளது என்ற எச்சரிக்கையை துளியேனும் மதிக்காமல் இருந்த புலனாய்வு மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளின் கவனயீனமான ‘சிறு குறை’ காரணமாக 300க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாயின. குறித்த சம்பவத்தில் கவனயீனமாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சில பொலிஸ் அதிகாரிகளுக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வரை பதவி உயர்வு வழங்கப்பட்டதும் அவர்களால் நடந்த ‘சிறு குறை’ காரணமாகவே இருக்கும்.

அரசாங்கம், அரச நிறுவனமொன்றின் குறைகள், ஊழல் மற்றும் இலஞ்சம் குறித்து வெளிக்கொண்டுவரல், விமர்சித்தல் போன்றன நாட்டு மக்களுக்குள்ள ஜனநாயக உரிமையாகும். அதனைக் கட்டுப்படுத்துவது என்பது நாட்டில் ஜனநாயகத் தன்மையையும் கட்டுப்படுத்துவதாகும். பொலிஸ் ஊடகப் பிரிவின் ஏப்ரல் 1ஆம் திகதி அறிவித்தல் மூலம் தற்போது நடைபெற்றுள்ளது அதுவே.

ஊடகச் சுதந்திரம் மற்றும் மக்கள் தகவல்களை அறிந்து கொள்வதற்குள்ள உரிமை என்பன ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவையாகும். பயம், பக்கச் சார்பற்ற ஊடகப் பயன்பாடு குறித்து உலகம் கதைக்கும் போது, இலங்கையில் தற்போது பயம் மற்றும் பக்கச் சார்புள்ள ஊடக பயன்பாடு குறித்து பேசப்படுகின்றது. இலங்கையின் பெரும்பான்மையான பொது மக்கள் இலங்கை, உலகம் குறித்துப் பார்ப்பதும், தீர்மானங்கள் எடுப்பதும் ஓரிரு ஊடக நிறுவனங்களின் விருப்பு- வெறுப்புக்களின் அடிப்படையில் என்பதே அதற்கான காரணமாகும். பிரதானமாக இலங்கையில் இரண்டு ஊடக நிறுவனங்கள் பொது மக்கள் சொத்தான அலைவரிசைகளைப் பயன்படுத்தி, பொது மக்களின் தகவல் அறிந்துகொள்ளும் உரிமைக்கு கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன. அரசியல் மற்றும் தமது தனிப்பட்ட தேவைகளை அடைந்துகொள்வதற்காக ‘போலி’ அல்லது ‘தவறான’ செய்திகளைக் கொண்டு பொது மக்களின் சிந்தனா சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றன. இதுவும் ஜனநாயக சமூகத்துக்கான சவாலாகும்.

சில பிரதான ஊடகங்களின் பக்கச் சார்புடைய ஊடக பயன்பாடு காரணமாக, பொது மக்களின் தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மாற்று வழிமுறைகள் மூலமே பொது மக்களுக்கு தகவல்கள் கொண்டு செல்லப்பட வேண்டும்.

இணையத்தள ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களே அதற்கான சிறந்த மாற்றீடாகும். இணையத்தள ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பயம், பக்கச் சார்பின்றிய ஊடக அறிக்கையிடல் குறித்து சிந்திப்பதற்கான காலமே இது. போலி செய்திகள் மற்றும் வெறுப்புப் பிரச்சாரங்கள் பரவுவதைத் தடுக்க வேண்டுமானால், உண்மையான தகவல்கள் மக்களைச் சென்றடைய வேண்டும். உண்மைகளின் மூலம் பொய்கள் இல்லாமலாக்கப்பட வேண்டுமே தவிர கட்டுப்பாடுகள் மூலமல்ல. கட்டுப்பாடுகள் மூலம் போலி செய்திகளை ஒழிக்க முற்படுவது பயனற்றதாகும்.

இதன் காரணமாக, பயமற்ற, பக்கச் சார்பற்ற மற்றும் பொது மக்களின் தகவல் அறிந்து கொள்ளும் உரிமையைப் பாதுகாக்கும் ஊடகவியலொன்றுக்காக அனைவரும் ஒன்றுபடுவோமாக.


Share