இலங்கை இராணுவத்திலும் மூவருக்கு கொரோனா தொற்று: இருவர் விடுமுறையில் இருந்து திரும்பியவர்கள்

Staff Writer | Author . Translate to English or සිංහල 4/28/2020 12:37:00 PM
இலங்கை இராணுவத்திலும் மூவருக்கு கொரோனா தொற்று: இருவர் விடுமுறையில் இருந்து திரும்பியவர்கள்

கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனரா என்பதை கண்டறிய நேற்று (27) வரை மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனைகளுக்கு ஏற்ப கடற்படையில் 180 பேருக்கும், இலங்கை இராணுவத்தில் மூன்று பேருக்கும் விமானப் படையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு தேசிய மையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கடற்படையில் கொரோனா தொற்றியிருக்கக் கூடும் என்ற சந்தேகிக்கின்ற, விடுமுறையில் சென்றவர்கள் உட்பட அனைவரும் முகாம்களுக்குத் திரும்பியுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கொரோனா தொற்று உறுதியாகியுள்ள இலங்கை இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் சீதுவ, மலே வீதி மற்றும் பனாகொடை ஆகிய இராணுவ முகாம்களைச் சேர்ந்தவர்களாவர். மலே வீதி மற்றும் பனாகொடை ஆகிய இராணுவ முகாம்களைச் சேர்ந்த இருவரும் விடுமுறையில் வீட்டுக்குச் சென்று திரும்பியவர்கள் என்றும் கொரோனா தடுப்பு தேசிய மையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

கடற்படையில் மேலும் ஒரு குழுவினருக்கு மேற்கொண்ட பீசீஆர் பரிசோதனை முடிவுகள் இன்று (28) வெளிவர இருக்கின்றதும் குறிப்பிடத்தக்கது.

இவர்கள் அனைவரினதும் நெருங்கிய தொடர்புகளை இனங்கண்டு, அவர்களைத் தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக கொரோனா தடுப்பு தேசிய மையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

Share