கொரோனா காரணமாக நிவ்யோர்க்கில் 37 பொலிஸார் உயிரிழப்பு: 4800 பேருக்கு நோய்த் தொற்று

Staff Writer | Author . Translate to English or සිංහල 4/27/2020 11:04:00 AM
கொரோனா காரணமாக நிவ்யோர்க்கில் 37 பொலிஸார் உயிரிழப்பு: 4800 பேருக்கு நோய்த் தொற்று

கொரோனா நோய்த் தொற்று காரணமாக நிவ்யோர்க் பொலிஸ் திணைக்களத்தின் 37 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக சீஎன்என் செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

நிவ்யோர்க் பொலிஸ் திணைக்களத்தின் உறுப்பினர்கள் 4,837 பேர் கோவிட் 19 கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாகவும் குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், நிவ்யோர்க் பொலிஸ் திணைக்களத்தின் 3,166 அதிகாரிகள் நோய் அறிகுறிகள் காரணமாக சேவையில் இருந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த 3,530 பொலிஸ் அதிகாரிகள் பூரண சுகமடைந்து மீண்டும் பொலிஸ் சேவையில் இணைந்து கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Share