நாளை நாடு முழுவதும் ஊரடங்கு அமுலாகும்

Staff Writer | Author . Translate to English or සිංහල 4/26/2020 8:07:00 PM
நாளை நாடு முழுவதும் ஊரடங்கு அமுலாகும்

நாளை (27) திங்கட்கிழமை நாடு தழுவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுலாகும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

விடுமுறையில் வீடுகளுக்குச் சென்றுள்ள முப்படையினர் முகாம்களுக்குத் திரும்புவதை இலகுபடுத்துவதற்கே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.00 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு இரவு 8.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

Share