பாகிஸ்தானில் 150 சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு கொரோனா தொற்று: PPE வழங்கக் கோரி உண்ணாவிரதம்

Staff Writer | Author . Translate to English or සිංහල 4/26/2020 7:38:00 PM
பாகிஸ்தானில் 150 சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு கொரோனா தொற்று: PPE வழங்கக் கோரி உண்ணாவிரதம்

பாகிஸ்தானில் 150க்கு மேற்பட்ட சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களில் சிலர் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இதேநேரம், மருத்துவ, சுகாதார சேவையில் உள்ளவர்களுக்குப் போதிய தனியார் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்றும் PPEகளை வழங்குமாறும் கோரி மருத்துவர்கள் மற்றும் தாதியர் உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். 

இவ்வாறு உண்ணாவிரதத்தை ஆரம்பித்த மருத்துவர்கள் மற்றும் தாதியர் தாக்கப்பட்டுள்ளதாகவும் த கார்டியன் செய்திச் சேவை தெரிவித்;துள்ளது.

சுகாதாரத் துறையினரின் நியாயமான கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்கப்படாமையால் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளோரது எண்ணிக்கையும் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவிப்போரும் அதிகரித்து வருவதாக அந்நாட்டு இளம் மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Share