95 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று: 27 பேர் விடுமுறையில் சென்றவர்கள்

Staff Writer | Author . Translate to English or සිංහල 4/26/2020 6:15:00 PM
95 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று: 27 பேர் விடுமுறையில் சென்றவர்கள்

கடற்படையின் 95 வீரர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார். 

கடற்படை சேவையில் இருந்த 68 பேரும் விடுமுறையில் வீடுகளுக்குச் சென்றிருந்த 27 பேரும் மேற்படி நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களில் உள்ளடங்குகின்றனர். 

விடுமுறையில் வீட்டுக்குச் சென்றிருந்த கடற்படை வீரர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.


Share