சகல வைபவங்கள்: சுற்றுலாக்கள்: கூட்டங்களுக்கு தொடர்ந்தும் தடை

Staff Writer | Author . Translate to English or සිංහල 4/25/2020 6:30:00 PM
சகல வைபவங்கள்: சுற்றுலாக்கள்: கூட்டங்களுக்கு தொடர்ந்தும் தடை

அனைத்து விதமான வைபவங்கள், சுற்றுலாக்கள், மத ரீதியான பயணங்கள், கொண்டாட்டங்கள், கூட்டங்கள் மற்றும் மத ஒன்றுகூடல்களுக்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள் மற்றும் திரையரங்குகளும் மறுஅறிவித்தல் வரும் வரை ஆரம்பிக்கப்பட மாட்டது. 

மக்கள் ஒன்றுகூடுவது வைரஸ் பரவலுக்கு காரணமாக அமையும் என்பதால் அனைத்து விதமான மத ஒன்றுகூடல்களையும் தவிர்த்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி ஊடகப் பிரிவு நாட்டு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மக்களின் நாளாந்த வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசிய சேவை வழங்கல்களை தடையின்றி மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்தி, நாட்டை வழமைக்குக் கொண்டுவர அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொது மக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும். 

மக்கள் முடியுமானவரை வீட்டினுள் தங்கியிருப்பதோடு, சுகாதார ஆலோசனைகளையும் பின்பற்ற வேண்டும். சமூக நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயற்படுவோருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 

Share