குறைந்த அவதானமுள்ள பிரதேசங்களில் ஏப்ரல் 27இல் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, இரவு நேரங்களில் மாத்திரம் அமுல்படுத்தப்படும்

Staff Writer | Author . Translate to English or සිංහල 4/25/2020 5:56:00 PM
குறைந்த அவதானமுள்ள பிரதேசங்களில் ஏப்ரல் 27இல் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, இரவு நேரங்களில் மாத்திரம் அமுல்படுத்தப்படும்

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் மே மாதம் 4ஆம் திகதி திங்கட்கிழமை வரை ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

ஏனைய மாவட்டங்களில் ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு இரவு 8.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும். மே மாதம் 1ஆம் திகதி வரை இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தினமும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Share